ஜி. யு. போப் விருது (தமிழ்நாடு அரசு)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜி. யு. போப் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.

பெயர்க் காரணம்

ஜி. யு. போப் என்னும் ஆங்கிலேயர், தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்றவர். தமிழ் மொழியில் உள்ள திருக்குறள், நாலாடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் அந்நூல்களின் கருத்துகளும் பெருமைகளும் பிற நாடுகளில் பரவின. எனவே ஜி. யு. போப்பின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் ஜி. யு. போப்பின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது.[1]

யாருக்கு?

தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]

எவ்வளவு? எவை?

ஜி. யு. போப் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[1]

எப்பொழுது?

ஜி. யு. போப் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது.[1]

சான்றடைவு

  1. 1.0 1.1 1.2 1.3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2013 ஆம் நாள் சமர்பித்த அறிக்கை