முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில் தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1] முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை விருதாக வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[1]

நோக்கம்

தமிழ் மொழியில் மென்பொருள்களை உருவாக்குபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்குடன் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றோர்

ஆண்டு பெயர்
2013 ந. தெய்வசுந்தரம் [2]
2014 து. குமரேசன் [3]
2015 செல்வமுரளி [4]
2016 ராமசாமி துரைபாண்டி[5]
2017 மதன் கார்க்கி [6]
2018 நாகராஜன் [7]
2019 சே. இராஜாராமன் (எ) நீச்சல்காரன் [8]
2020 முனைவர் வ. தனலட்சுமி[9]
2021 என்.எஸ். நாணா என்கிற நாராயணன்[10]
2022 ஏ.ஆரோக்கியதாஸ்[11]

கணியன் பூங்குன்றனார் பரிசு

இந்த விருதிற்கு முன்னோடியாக கடந்த சில ஆண்டுகளில் கணியன் பூங்குன்றனார் மென்பொருள் பரிசு என்ற ஒரு விருது தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மென்பொருளுக்கு வழங்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின் விளைவாக ஒரு லட்சம் பரிசுத் தொகை மதிப்புடன் கணியன் பூங்குன்றனார் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.[12]

Caption text
ஆண்டு மென்பொருள் விருதாளர்
2007-08 பனேசியா ட்ரீம்ஸ் வீவர்ஸ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் (ராமசாமி துரைபாண்டி)
2008-09 தமிழ் நூல்கள் (குறுஞ்செயலி) இமகத்வா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (கணேஷ் ராம்)
2009-10 என் எச் எம் ரைட்டர் நியூ ஹொரைசன் மீடியா (பத்ரி சேசாத்ரி)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2013 ஆம் நாள் சமர்ப்பித்த அறிக்கை
  2. தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் பெயரில் விருதுகள்; ஜெயலலிதா வழங்கினார்
  3. தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் பெயரில் விருதுகள்; ஜெயலலிதா வழங்கினார்
  4. "செயலாலும் செயலியாலும் விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்". தி தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/210271--1.html. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2020. 
  5. "2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய், கபிலர் உ.வே.சா., கம்பர் விருது: முதல்வர் வழங்கினார்". தினகரன் இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210115230619/https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=390974. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2020. 
  6. "சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வர் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/feb/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3098371.html. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2020. 
  7. "தமிழ் வளர்ச்சி விருதுகள்! தமிழகஅரசு அறிவிப்பு". பத்திரிகை.காம். பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2020.
  8. "தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் வைகைச்செல்வன், ஹெச்.வி.ஹண்டே உட்பட 77 பேருக்கு விருது முதல்வர் பழனிசாமி வழங்கினார்". இந்து தமிழ்திசை. பார்க்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "தமிழக அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு". புதியதலைமுறை. https://www.puthiyathalaimurai.com/tamilnadu/chief-minister-mk-stalin-s-announcement-book-park-on-behalf-of-the-government-of-tamil-nadu. பார்த்த நாள்: 23 சூலை 2023. 
  10. "தமிழ்நாடு நாள் செய்திக் குறிப்பு". செய்தி மக்கள் தொடர்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2023.
  11. "தமிழ்நாடு நாள் செய்திக் குறிப்பு". செய்தி மக்கள் தொடர்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2023.
  12. "தமிழில் சிறந்த மென்பொருள்: கணியன் பூங்குன்றனார் பரிசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/jan/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-296890.html. பார்த்த நாள்: 12 December 2023.