திரு. வி. க. விருது
Jump to navigation
Jump to search
திரு. வி. க. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை நிலைஎண்: 1657 நாள்: 03-09-1979 மூலம்1979 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு முதல் 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும், தகுதியுரையும் வழங்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அலவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]
விருது பெற்றவர்கள் பட்டியல்
வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | ஜெகசிற்பியன் | 1979 |
2 | நாரண. துரைக்கண்ணன் | 1980 |
3 | அ. கி. பரந்தாமனார் | 1981 |
4 | திருக்குறளார் வீ. முனுசாமி | 1982 |
5 | பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் | 1983 |
6 | கோவி. மணிசேகரன் | 1984 |
7 | டாக்டர் க. த. திருநாவுக்கரசு | 1985 |
8 | கவிஞர் கா. மு. செரீப் | 1986 |
9 | டாக்டர் நா. சுப்பு ரெட்டியார் | 1987 |
10 | மணவை முஸ்தபா | 1988 |
11 | டாக்டர் தமிழண்ணல் | 1989 |
12 | புலவர் கா. கோவிந்தன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் |
1990 |
13 | இராஜம் கிருஷ்ணன் | 1991 |
14 | அ. மு. பரமசிவானந்தம் | 1992 |
15 | முனைவர் தி. முத்துக் கண்ணப்பர் | 1993 |
16 | புலவர் இரா. இளங்குமரன் | 1994 |
17 | பேராசிரியர் கா. பொ. இரத்தினம் | 1995 |
18 | பேராசிரியர் மா. நன்னன் | 1996 |
19 | மா. சு. சம்பந்தன் | 1997 |
20 | புலவர் மருதவாணன் | 1998 |
21 | கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி) |
1999 |
22 | பேராசிரியர் கா. சிவத்தம்பி (இலங்கை) |
2000 |
23 | முனைவர் ப. இராமன் | 2001 |
24 | பேராசிரியர் தி. வே. கோபாலய்யர் | 2002 |
25 | முனைவர் ம.ரா.போ. குருசாமி | 2003 |
26 | முனைவர் ச. அகத்தியலிங்கம் | 2004 |
27 | ----- | 2005 |
28 | க. திருநாவுக்கரசு (எழுத்தாளர்) |
2006 |
29 | முனைவர் த. பெரியாண்டவன் | 2007 |
30 | முனைவர் ச. பா. அருளானந்தம் | 2008 |
31 | வெ. அண்ணாமலை என்ற இமயம் | 2009 |
32 | பேராசிரியர் அ. அய்யாச்சாமி | 2010 |
33 | முனைவர் நா. ஜெயப்பிரகாசு | 2011 |
34 | பிரேமா நந்தகுமார் | 2012 |
35 | திரு.செ. அசோகமித்திரன் | 2013 |
36 | முனைவர் கரு.நாகராசன் | 2014 |
37 | கி. வைத்தியநாதன் | 2015 |
38 | முனைவர் மறைமலை இலக்குவனார் | 2016 |
39 | வை. பாலகுமாரன் | 2017 |
40 | முனைவர் கு.கணேசன் | 2018 |
41 | முனைவர் சே. சுந்தரராசன் | 2019 |
42 | வி.என்.சாமி | 2020 |
குறிப்பு
- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.
வெளி இணைப்புகள்