தமிழ்த்தாய் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்த்தாய் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்று அளித்து சிறப்பிக்கப்படுகிறது.

விருது பெற்ற அமைப்புகள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்ற அமைப்பின் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 மதுரைத் தமிழ்ச் சங்கம் 2012
2 தில்லித் தமிழ்ச் சங்கம் 2013
3 நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் 2014
4 திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் 2015
5 மாணவர் மன்றம் 2016
6 பெங்களூர் தமிழ்ச் சங்கம் 2017
7 புவனேசுவர் தமிழ்ச் சங்கம் 2018
8 சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

ஆதாரம்

  • தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [1]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=தமிழ்த்தாய்_விருது&oldid=19277" இருந்து மீள்விக்கப்பட்டது