சந்திரமுகி 2

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சந்திரமுகி 2
Chandramukhi 2
இயக்கம்பி. வாசு
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதைபி. வாசு
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புராகவா லாரன்ஸ்
லட்சுமி மேனன் (நடிகை)
கங்கனா ரனாத்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு28 செப்டம்பர் 2023 (2023-09-28)
ஓட்டம்171 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு60 கோடி (US$7.5 மில்லியன்)[2]
மொத்த வருவாய்9.4 கோடி (US$1.2 மில்லியன்)[3]

சந்திரமுகி 2 (Chandramukhi 2) 2023ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஒரு நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். இது சந்திரமுகியின் (2005) தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 2022-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி சூலையில் தொடங்கியது. ஆகத்து 2023 நடுப்பகுதியில் படப்படிப்பு முடிவடைந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே ஆர். டி. ராஜசேகர் மற்றும் ஆண்டனி ஆகியோர் செய்திருக்கின்றார்கள்.

சந்திரமுகி 2 திரைப்படம் 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

கதைக்கரு

ஒரு பணக்காரக் குடும்பம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது பிரச்சினைகளைத் தீர்க்கத் தங்களது குலதெய்வத்தை வழிபட நீண்ட காலமாக பிரிந்திருந்த உறவினர்களுடன் இணைந்து கிராமத்திற்குச் செல்கின்றது அந்தக் குடும்பம். இதனால் நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய நடனக் கலைஞர் சந்திரமுகி மற்றும் வேட்டையன் ராஜா இடையேயான பகையை மீண்டும் எழும்புகிறது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சந்திரமுகியின் ஆவியாலும் வேட்டையன் ராஜா ஆவியால் மற்றொருவரும் சிக்கி இருக்க இந்தப் பிரச்சினையில் இருந்து அந்தக் குடும்பம் எப்படி மீண்டது என்பது கதைக்கருவாக இருக்கின்றது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சந்திரமுகி_2&oldid=32830" இருந்து மீள்விக்கப்பட்டது