கொருக்கை வீரட்டேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில்
கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில்
கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°09′19″N 79°36′44″E / 11.1553°N 79.6123°E / 11.1553; 79.6123
பெயர்
புராண பெயர்(கள்):யோகீசபுரம், காமதகன புரம், கம்பகரபுரம்
பெயர்:கொருக்கை (திருக்குறுக்கை) வீரட்டேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கொருக்கை - 609203
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரட்டேசுவரர்[1]
தாயார்:ஞானாம்பிகை
தல விருட்சம்:கடுக்காய் மரம்
தீர்த்தம்:சூலதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

திருக்குறுக்கை அல்லது கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் என்பது அப்பர் பாடல் பெற்ற ஒரு சிவத்தலம் ஆகும். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும்.

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் வீரட்டேஸ்வரர், இறைவி ஞானாம்பிகை.[2]

கோயில் அமைப்பு

கோயிலுக்கு முன்பு குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், நந்தியைக் காணலாம். வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் வலப்புறம் சுக்கிரவார அம்மனைக் காணலாம். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அம்மன் சன்னதியை அடுத்து தட்சிணாமூர்த்தி சன்னதி, வாகனங்கள், நடராஜர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து திருச்சுற்றில் குறுங்கை விநாயகர் சன்னதி உள்ளது. அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் உள்ளனர். அதற்கடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சோகஹரேஸ்வரர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. அடுத்து காணப்படும் உற்சவமூர்த்திகள் அறை உள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், பிரம்மா, அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி ஆகியோர் உள்ளனர்.

வழிபட்டோர்

திருமால், பிரம்ம தேவர், லட்சுமி முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 126
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்