அயோத்திதாசப் பண்டிதர் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அயோத்திதாசப் பண்டிதர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 புலவர் வே. பிரபாகரன் 2019
2 முனைவர் கோ.ப. செல்லம்மாள்[2] 2020

மேற்கோள்கள்

  1. "அயோத்திதாசர் விருது கட்டுரையாளர்களை சென்றடையட்டும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-04.
  2. http://cms.tn.gov.in/sites/default/files/go/tamil_t_1_2021.pdf

புற இணைப்புகள்