மகிழ் திருமேனி
மகிழ் திருமேனி (Magizh Thirumeni) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குனர்கள் செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த பிறகு இவர் தடையறத் தாக்க (2012), மீகாமன் (2014), தடம் (2019) உட்பட நான்கு தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
மகிழ் திருமேனி | |
---|---|
பிறப்பு | 9 அக்டோபர் 1978 |
தேசியம் | இந்தியர் |
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | ஆன் ரோசன்னா பெர்னான்டோ (திருமணம் 2021 - தற்போது வரை) |
ஆரம்ப கால வாழ்க்கை
இளைஞனாக, மகிழ் திருமேனி, தமிழ் மற்றும் உருசிய இலக்கியத்தின் தீவிர வாசகராக இருந்தார். மேலும் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதினார்.[1] 2000களின் முற்பகுதியில், இயக்குநராக திரைப்படத் துறையில் முன்னேற்றமடைய விரும்பிய இவர், பி. வாசு, டி. ராஜேந்தர் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சேர விரும்பினார். இயக்குநர் கஸ்தூரி ராஜா தனது மகன் செல்வராகவனின் முதல் படத்தில் பணிபுரிய இவரை ஒப்பந்தம் செய்தார். ஆனால் அந்தப் படம் தாமதமானதால் இவர் முதலில் துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனனிடம் காக்க காக்க (2003) படத்தில் இணைந்து பணியாற்றினார்.[1] பின்னர், இவருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் (2007), வேட்டையாடு விளையாடு (2006) படத்திலும் இணைந்து பணியாற்றினார்.
இயக்குநர்
2010 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவைத் திரைப்படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படம், அருண் விஜய் நடித்த அதிரடித் திரைப்படமான தடையறத் தாக்க (2012), சூன் 2012 இல் வெளியிடப்பட்டது.[2] பின்னர் நடிகர் ஆர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, "மீகாமன்" (2014) என்ற படத்தை இயக்கினார். இது திசம்பர் 2014 இல் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3] 2019இல் வெளியிடப்பட்ட இவரது அடுத்த படமான "தடம்" இதேபோன்ற நேர்மறையான விமர்சனத்தையும் பெற்று, வணிக வெற்றியாகவும் இருந்தது.
திரைப்படவியல்
இயக்குநராக
ஆண்டு | படம் | தயாரிப்பு நிறுவனம் | குறிப்புகள் | மேற்கோள் |
---|---|---|---|---|
2010 | முன்தினம் பார்த்தேனே | செவந்த் சேனல் கம்யுனிகேசன்ஸ் | இயக்குநராக அறிமுகம் | |
2012 | தடையறத் தாக்க | பெதர் டச் என்டர்டெயின்மென்ட் | ||
2014 | மீகாமன் (திரைப்படம்) | நேமிசந்த் ஜபக் | ||
2019 | தடம் (திரைப்படம்) | ரெதான் சினிமாஸ் | ||
2021 | கலகத் தலைவன் | ரெட் ஜெயணட் மூவிஸ் | பின் தயாரிப்பு பணியில் | [4] |
நடிகராக
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2021 | டெடி | மரு. வரதராஜன் | நடிகராக அறிமுகம் |
2021 | யாதும் ஊரே யாவரும் கேளிர் | அறிவிக்கப்படும் | படப்பிடிப்பில் |
குரல் கலைஞராக
ஆண்டு | படம் | நடிகர் | இயக்குநர் | மொழி |
---|---|---|---|---|
2018 | இமைக்கா நொடிகள் (திரைப்படம்) | அனுராக் காஷ்யப் | ஆர். அஜய் ஞானமுத்து | தமிழ் |
ஒளிப்படங்கள்
- Wedding April 14th.jpg
மகிழ் திருமேனி தனது திருமணத்தின் போது
- Magizh Weds Ann.jpg
மகிழ்-ஆன் இணை
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Ramesh, Deepika (2014-12-25). "Magilzh Thirumeni Interview: The Insider" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2019-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190508205506/https://silverscreen.in/features/magilzh-thirumeni-interview-the-insider/.
- ↑ V. Lakshmi (2012-06-16). "Magizh's on a mission". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103163034/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-16/news-interviews/32255781_1_arun-vijay-thadaiyara-thaakka-villains. பார்த்த நாள்: 2012-07-24.
- ↑ "Magizh Thirumeni - Interview". http://www.behindwoods.com/tamil-director/magizh-thirumeni/magizh-thirumeni-interview.html.
- ↑ "Udhayanidhi Stalin's film with Magizh Thirumeni starts rolling - Times of India ►" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/udhayanidhi-stalins-film-with-magizh-thirumeni-starts-rolling/articleshow/79076269.cms.