முன்தினம் பார்த்தேனே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முன்தினம் பார்த்தேனே
இயக்கம்மகிழ் திருமேனி
தயாரிப்புமாணிக்கம் நாராயணன்
கதைமகிழ் திருமேனி
இசைதமன் (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஅருண் வின்சென்ட்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 19, 2010 (2010-03-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முன்தினம் பார்த்தேனே (Mundhinam Paartheney) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி இயக்கினார். இதில் புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா கோஸ்லா, லிஸ்னா, பூஜா, சாய் பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ் என்ற பதாகையின் கீழ் மாணிக்கம் நாராயணன் இப்படத்தை தயாரித்தார். இந்த படம் 2010 மார்ச் 19 அன்று வெளியானது. இப்படமானது திரைக்கதை, கதை நகர்வு, நகைச்சுவை போன்றவற்றிற்காக பாராட்டப்பட்டது.[1][2] படத்தின் தலைப்பானது வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரியைக் கொண்டு இடப்பட்டது.

கதை

கதை லண்டனில் தொடங்குகிறது. அங்கு சஞ்சய் (சஞ்சய்), 'அன்பான' பெண்ணைப் பற்றி விவரிக்கிறான். மேலும் காதலைப் பற்றி பேசுகிறான். கதை பின்னோக்கிய காட்சிகளுக்கு பயணிக்கிறது. அதில் நாயகன் பூஜாவை சந்திக்கிறான்.

அவன் அவளை எல்லா வகையிலும் ஈர்க்க முயற்சிக்கிறான். ஆனால் அவளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயமாகி அவள் திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்ததும் அவனது நம்பிக்கை தகர்கிறது. ஆர்த்தி (ஏக்தா கோஸ்லா), என்ற ஒரு நடன ஆசிரியை அவள் பாரம்பரிய சிந்தனைகள் கொண்ட ஒரு பெண் ஆனால் நவீன கண்ணோட்டம் கொண்டவள். ஆனால் அவள்மீது பல வதந்திகள் உலவுகின்றன. அவள்மீது நாயகனுக்கு காதல் மலர்கிறது. ஆனால் அவள் மீதான அவதூறுகளால் அவன் தயகம் கொள்கிறான். பின்னர் சஞ்சயின் சக ஊழியரான அனு இவர்களிடையே நுழைகிறாள். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெரிய வருகிறது. ஆர்த்தியா? அனுவா? சஞ்சய் தன் வாழ்க்கையை யாருடன் தொடர்கிறான் என்பதற்கு விடையோடு படம் நிறைவுறுகிறது.

நடிப்பு

இசை

இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்தார். பாடல் இசையை சோனி மியூசிக் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இன்றே இன்றே"  ரஞ்சித் 4:05
2. "பேசும் பூவே"  கிரிஷ், சுசித்ரா 4:07
3. "மனதின் அடியில்"  பிரியதர்சினி 4:18
4. "Maya"  நரேஷ் ஐயர், ஜனனி பரத்வாஜ் 5:10
5. "கனவேனா"  ஹரிசரண், சுசித்ரா 3:06
6. "முன்தினம் பார்த்தேனே"  எஸ். மதன், சுசித்ரா 3:18
மொத்த நீளம்:
24:04

வரவேற்பு

ரெடிஃப் எழுதிய விமர்சனத்தில் "இது திருப்பங்களைக் கொண்ட அதிரடி திரைப்படமாக இல்லை. ஆனால் முன்தினம் பார்த்தேனே மிகவும் துல்லியமான, நகைச்சுவையான சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ".[2]ந்துஸ்தான் டைம்ஸ் எழுதிய விமர்சனத்தில் "முன்தினம் பார்தேனே துரதிர்ஷ்டவசமாக, கவனத்துடன் வடிவமைக்கப்படாத ஒரு நல்ல கருப்பொருள் ஆகும். உண்மையில், சுவாரஸ்யமான இதன் கதையானது மோசமான கதை பாணியால் கெட்டுவிட்டது. " [3] சிஃபி எழுதுகையில் "கௌதம் வாசுதேவ மேனன் ஸ்கூல் ஆஃப் ஃபிலிம்மேக்கிங்கில் பட்டம் பெற்ற மகிழ் திருமேனி, முன்தினம் பார்த்தேனே மூலம் ஒரு சுயாதீன இயக்குனராக உயர்ந்துள்ளார். கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் அது கவர்ச்சிகரமான புத்துணர்ச்சியைக் கொண்டுள்ளது ".[4]

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முன்தினம்_பார்த்தேனே&oldid=36750" இருந்து மீள்விக்கப்பட்டது