ஜனனி பரத்வாஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜனனி பரத்வாஜ்
Janani Bharadwaj Profile Picture.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு30 சூன் 1989 (1989-06-30) (அகவை 35)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)தமிழ் பின்னணிப் பாடகி
இசைத்துறையில்2004 ம் ஆண்டு முதல்

ஜனனி பரத்வாஜ், இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பாடியுள்ள இவர், இசை அமைப்பாளர் பரத்வாஜின் மகளாவார். [1]

திரைப்பட துறை

இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 1989 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி பிறந்த ஜனனி, [2]பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அய்யா என்ற தமிழ் திரைப்படத்தின் அத்திரி பத்திரி பாடலுடன் தொழில்முறை பின்னணி பாடகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவின் தனி அறிமுகப் பாடலாக இது கூறப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மாதவன் நடித்த ப்ரியசகி படத்தில் பாடகர் ஹரிஷ் ராகவேந்திராவுடன் இணைந்து அவரால், இரண்டாவது பாடலான கண்களினால் பாடப்பட்டது. தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள இவர், அவரது தந்தையின் இசையில், பல்வேறு வெற்றிகரமான பாடல்களைப் பாடியுள்ளார். அஜீத் குமார் நடித்த அசல் படத்தில் முகேஷுடன் இவர் பாடிய தொட்டடைங் பாடல் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.[3]

இசைப் பதிவுகளுக்கான பட்டியல்

ஜனனி, பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடல் திரைப்படம்
"அத்திரி பத்திரி" அய்யா
"கண்களினால்" பிரியசகி
"நீ வேண்டும்" குண்டக்கா மண்டக்கா
"நண்பா நன்பா" பிப்ரவரி 14 (திரைப்படம்)
"அரேபியா" இதய திருடன்
"எத்தனை வருஷம்" ஜாம்பவான்
"முதல் முதலை" வட்டரம்
"இந்த நிமிதம்" பள்ளிக்கூடம்
"கோலாட்டம்" வல்லமை தாராயோ
"எங்களுக்கு" ஒன்பது ரூபாய் நோட்டு
"அச்சம் வேகம்" சொல்ல சொல்ல இனிக்கும்[4]
"தொட்டடைங்" அசல்
"அழகழகே" களவாடிய பொழுதுகள்
"தண்ணிக்குள்ள தே பிடிச்சதென்னவோ" நந்தி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜனனி_பரத்வாஜ்&oldid=9107" இருந்து மீள்விக்கப்பட்டது