இமைக்கா நொடிகள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இமைக்கா நொடிகள்
இயக்கம்ஆர். அஜய் ஞானமுத்து
தயாரிப்புசி. ஜெ. ஜெயக்குமார்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர் (உரையாடல்)
திரைக்கதைஆர். அஜய் ஞானமுத்து
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்புஅதர்வா
நயன்தாரா
அனுராக் காஷ்யப்
ராஷி கன்னா
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்கேமியோ பிலிம்சு இந்தியா
வெளியீடு30 அக்டோபர் 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படமானது ஆர். அஜய் ஞானமுத்துவால் எழுதி, இயக்கி சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது.[1] அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆர். டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 30, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 இல் தொடங்கப்பட்டது.[2]

நடிகர்கள்

கதை

ருத்ரா என்ற மர்மநபர் சில வருடங்களுக்கு முன் சில முக்கிய நபர்களை கொலை செய்திருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து அழித்துவிட்டதாக அறிவிக்கிறார் காவல்துறை அதிகாரி நயன்தாரா.ஆனால், சிலவருடம் கழித்து அதே பெயரில் அதே குற்றப்பாணியில் ஒருவன் தொடர்கொலைகள் செய்து காவல்துறைக்கு சவால் விடுகிறான் ஒருவன். ஆனால் நயன்தாரா அந்த ருத்ரா வேறு இந்த ருத்ரா வேறு எனக் கூறி தற்கால தொடர்கொலையாளியை அடையாளம் கண்டு அழிக்கிறார். உண்மைக் குற்றவாளி ருத்ரா ஏன் முந்தைய தொடர்கொலைகள் செய்தார்? போலி ருத்ரா தற்கால தொடர்கொலைகளை ஏன் செய்தார் என்பதும் படத்தில் திரைக்கதையாக சொல்லப்படுகிறது [3]. இப்படம் அதிரடி கதை கொண்ட காதல் படம் என்கிறார் ஆர். அஜய் ஞானமுத்து.[4]

படப்பணிகள்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டது. நம்ம மெட்ரோவின் சுரங்கங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரு நகரினை 25 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். மெட்ரோ தொடர்வண்டியின் சுரங்கப்பாதை மட்டும் இரண்டு இரவுகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது.[5] இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 17, 2017 இல் நிறைவுள்ளது.[6]

இசை

இத்திரைப்படத்தின் ஒரு பாடல் அக்டோபர் 2017இல் வெளியிடப்பட்டது. காதலிக்காதே என்னும் பாடலினை ஹிப்ஹாப் தமிழாவும், கௌசிக் கிரிசும் பாடியுள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்