பஞ்சு அருணாசலம்

பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் 1941 – 9 ஆகத்து 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம். [4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு, நடிகர் சுப்பு ஆவார்.

பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாசலம்.jpg
பிறப்பு(1941-06-18)18 சூன் 1941
தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1]
இறப்புஆகத்து 9, 2016(2016-08-09) (அகவை 75)
சென்னை, இந்தியா
பணிதயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1965-2016
வாழ்க்கைத்
துணை
மீனா
பிள்ளைகள்சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா

ஆரம்பகால வாழ்க்கை

ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். செட் போடுவதற்கான பொருளை எடுத்துத் தருவது, பிறகு வேலை முடிந்தவுடன் வாங்கி வைக்கும் வேலை.[3]

பணி

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.[4]. விரைவில் வெளிவரவிருக்கும் முத்துராமலிங்கம் படத்தின் பாடல்களை எழுதியதே, இவரின் இறுதி பாடலாசிரியர் பணியாகும்[5]. இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு[6]

இயற்றிய சில பாடல்கள்

வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்கள் இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1963 ஏழை பங்காளன் தாயாக மாறவா
2 1963 நானும் ஒரு பெண் பூப்போல பூப்போல பிறக்கும்
3 1965 கலங்கரை விளக்கம் பொன்னெழில் பூத்தது டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா எம். எஸ். விஸ்வநாதன்
4 1978 காற்றினிலே வரும் கீதம் ஒருவானவில் போலே என்
5 1979 ஆறிலிருந்து அறுபது வரை கண்மணியே காதல் என்பது எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
6 1984 தம்பிக்கு எந்த ஊரு காதலின் தீபமொன்று ஏற்றினாளே எஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
7 1989 மாப்பிள்ளை மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி இளையராஜா
8 1976 அன்னக்கிளி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் இளையராஜா

இயக்கிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

எழுத்தாளர் என்ற வகையில்

பாடலாசிரியர் பணி

1960களில்

1970களில்

1980களில்

1990களில்

2000த்தில்

கவியரசர் கண்ணதாசனுக்கு பாடல் உதவி

  1. புன்னகை
  2. தேனும் பாலும்
  3. ஆண்டவன் கட்டளை
  4. சங்கே முழங்கு
  5. பெரிய இடத்துப் பெண்
  6. தாயைக்காத்த தனயன்
  7. பழனி
  8. சபதம்
  9. மணி ஓசை
  10. காவியத் தலைவி

மறைவு

பஞ்சு அருணாசலம் தனது 75 வது அகவையில் சென்னையில் 2016 ஆகத்து 9 அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

  1. http://cinema.maalaimalar.com/2013/11/18224845/panchu-arunachalam-introduce-i.html
  2. "திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்" இம் மூலத்தில் இருந்து 2014-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140123141009/http://www.maalaimalar.com/2013/11/18224845/panchu-arunachalam-introduce-i.html. 
  3. 3.0 3.1 பஞ்சு அருணாசலம் (20 ஏப்ரல் 2016). திரைத்தொண்டர். ஆனந்தவிகடன். பக். 76-78. 
  4. 4.0 4.1 "சினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்!". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-70-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8967770.ece. பார்த்த நாள்: ஆகத்து 17, 2016. 
  5. "பிரபல தமிழ் திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்". பிபிசி தமிழ். http://www.bbc.com/tamil/india/2016/08/160809_panchuarunachalam. பார்த்த நாள்: ஆகத்து 17, 2016. 
  6. "பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!". விகடன். http://www.vikatan.com/news/tamilnadu/66982-cinema-director-producer-panchu-arunachalam-passed-away.art. பார்த்த நாள்: ஆகத்து 17, 2016. 
  7. "Panchu Arunachalam passes away". The Hindu. http://www.thehindu.com/features/cinema/panchu-arunachalam-passes-away/article8963883.ece. பார்த்த நாள்: 9 ஆகத்து 2016. 
"https://tamilar.wiki/index.php?title=பஞ்சு_அருணாசலம்&oldid=9337" இருந்து மீள்விக்கப்பட்டது