ஆனந்த் (நடிகர்)
ஆனந்த் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முக்கியமாகவும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆனந்த் | |
---|---|
பிறப்பு | ஐதராபாத், தெலங்காணா, இந்திய ஒன்றியம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 – தற்போது வரை |
பிள்ளைகள் | 1 |
இன்றுவரை இவரின் மிகப் பெரிய படமாக மணிரத்னத்தின் அவல நகைச்சுவைத் திரைப்படமான திருடா திருடா உள்ளது. ஆனால் அந்த படத்தில் அவருடன் நடித் நடிகர்களைப் போலல்லாமல், அது இவருக்கு திருப்புமுனையை வழங்கத் தவறிவிட்டது. கமல்ஹாசனின் சத்யா மற்றும் விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.[1]
தொழில்
1987 ஆம் ஆண்டில் இவர் வண்ணக் கனவுகள் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2][3] இவர் சத்யா (1988), அன்பே என் அன்பே (1988), அபூர்வா சகோதரர்கள் (1989), ஊர் மரியாதை (1992), தலைவாசல் (1992), திருடா திருடா (1993), எனக்கு 20 உனக்கு 18 (2003) போன்ற படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.[4][5]
ஆனந்த் மலையாள குறும்படமான ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பதை தயாரித்து இயக்கியுள்ளார்.[6][7] இவர் குணச்சித்திர நடிகராக அண்மையில் நடித்த படைப்புகளில் 1: நேனோகாடின் (2014), ரிங் மாஸ்டர் (2014), இவன் மரியாதராமன் (2015), ஸ்ரீமந்துடு (2015), ஜெண்டில்மேன் (2016) போன்ற வெற்றிப் படங்கள் அடங்கும்.[8]
ஆரம்ப கால வாழ்க்கை
ஆனந்த் ஐதராபாத்தில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை வி. எஸ். பாரதி, புரூக் பாண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார், இவரது தாயார் ராஜலட்சுமி குடும்பத் தலைவி. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிதி துணைத் தலைவரான பி. ரமேஷ், விவேகானந்தா கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான டாக்டர் பி. சுரேஷ், முன்னாள் இந்திய துடுப்பட்ட வீரரும் இப்போது இந்திய துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான பாரத் அருண் ஆகியோர் இவரது சகோதரர்கள். திருவனந்தபுரத்தில் ஜென்செரோ என்ற உணவகத்தையும் ஆனந்த் வைத்திருக்கிறார்.[6][7]
தனிப்பட்ட வாழ்க்கை
ஆனந்த் நடிகை பூர்ணிமாவை 2009இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி என்ற மகன் உண்டு.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1987 | வண்ணக் கனவுகள் | தமிழ் | ||
1988 | சத்யா | தமிழ் | ||
1988 | பூந்தோட்ட காவல்காரன் | தமிழ் | ||
1988 | அன்பே என் அன்பே | தமிழ் | ||
1988 | அண்ணாநகர் முதல் தெரு | தமிழ் | ||
1988 | சுதந்திர நாட்டின் அடிமைகள் | தமிழ் | ||
1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் | ||
1989 | என் கணவர் | தமிழ் | ||
1989 | தர்ம தேஜா | தெலுங்கு | ||
1990 | நிலா பெண்ணே | தமிழ் | ||
1990 | அதிசய மனிதன் | தமிழ் | ||
1990 | கடப்பா ரெடம்மா | தெலுங்கு | ||
1990 | அஞ்சலி | தமிழ் | ||
1991 | மாஸ்டர் பிளான் | ஆண்டனி | Malayalam | |
1991 | என் பொட்டுக்கு சொந்தக்காரன் | தமிழ் | ||
1991 | அதிகாரி | சரத் | தமிழ் | |
1992 | ஊர் மரியாதை | கண்ணன் | தமிழ் | |
1992 | தலைவாசல் | சுதாகர் | தமிழ் | |
1992 | முதல் குரல் | தமிழ் | ||
1993 | சின்ன மாப்ளே | மைதிலியின் கணவர் | தமிழ் | |
1993 | திருடா திருடா | கதிர் | தமிழ் | |
1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | ஆனந்த் | தமிழ் | |
1994 | முதல் பயணம் | தமிழ் | ||
1995 | கிழக்கு மலை | தமிழ் | ||
1995 | ஆண்டி | தெலுங்கு | ||
1995 | அம்மாயி காப்புரம் | தெலுங்கு | ||
1995 | ஸ்ட்ரிட் பைட்டர் | தெலுங்கு | ||
1996 | அவதார புருஷன் | ஆனந்த் | தமிழ் | |
1996 | மிருப்பு | தெலுங்கு | ||
1996 | சிறீகரம் | சந்திரம் | தெலுங்கு | |
1996 | அக்கா பாகுன்னாவா | தெலுங்கு | ||
1996 | அம்மா நானா காவாலி | தெலுங்கு | ||
1996 | பெல்லால ராச்சியம் | கோபி | தெலுங்கு | |
1998 | கொண்டாட்டம் | ஆனந்த் | தமிழ் | |
1998 | சொல்லாமலே | ரியாஸ் | தமிழ் | |
1998 | சினேகிதடு | தெலுங்கு | ||
1999 | நினைவிருக்கும் வரை | ஆனந்த் | தமிழ் | |
1999 | மலபார் போலீஸ் | ஆனந்த் | தமிழ் | |
1999 | சீனு | ரியாஸ் | தெலுங்கு | |
1999 | உன்னருகே நானிருந்தால் | ஆனந்த் | தமிழ் | |
1999 | ஆசையில் ஒரு கடிதம் | ஆனந்த் | தமிழ் | |
2000 | வானத்தைப் போல | தமிழ் | ||
2000 | என்னவளே | ஆனந்த் | தமிழ் | |
2001 | தீவின்சண்டி | தெலுங்கு | ||
2001 | லவ் சேனல் | ஆனந்த் | தமிழ் | |
2001 | சிறீ மஞ்சுநாதா | தெலுங்கு கன்னடம் |
||
2002 | ரெட் | இராதாகிருஷ்ணன் | தமிழ் | |
2002 | ராஜ்ஜியம் | தமிழ் | ||
2003 | நாகா | தெலுங்கு | ||
2003 | நீ மனசு நாக்கு தெலுசு | சிறீதரின் மைத்துனன் | தெலுங்கு | |
2003 | எனக்கு 20 உனக்கு 18 | சிறீதரின் மைத்துனன் | தமிழ் | |
2004 | ஸ்வேதா நாகு | தெலுங்கு | ||
2005 | தி டைகர் | சுதேவ் சச்சிதானந்த் ஐ.பி.எஸ் — முசாஃபிர் | மலையாளம் | |
2005 | தொம்மனும் மக்களும் | காளியப்பன் | மலையாளம் | |
2005 | உதயனனு தரம் | தினேஷ் | மலையாளம் | |
2006 | எஸ் யுவர் ஹானர் | டி.எப்ஒ. சரத் செட்டி | மலையாளம் | |
2006 | வர்கம் | ஷெரிப் | மலையாளம் | |
2006 | சாக்கோ ராண்டமன் | மலையாளம் | ||
2006 | ஒருவன் | காவல் ஆய்வாளர் மாதவன் | மலையாளம் | |
2007 | பாயும் புலி | ரவிசங்கர் | மலையாளம் | |
2007 | ஜூலை 4 | வின்செண்ட் | மலையாளம் | |
2007 | இன்ஸ்பெகடர் கார்ட் | சரவணன் | மலையாளம் | |
2007 | அலி பாய் | பாஸ்கரன் | மலையாளம் | |
2008 | ஆண்டவன் | சதாசிவன் | மலையாளம் | |
2009 | ஜோஷ் | சத்தியாவின் தந்தை | தெலுங்கு | |
2009 | முத்திரை | அழகர் தொண்டைமான் | தமிழ் | |
2010 | மேரிக்குண்டோரு குஞ்சாடு | ஜானிகுட்டி | மலையாளம் | |
2010 | அட்வகேட் லட்சுமணன் லேடிஸ் ஒன்லி | ஹரிதாஸ் | மலையாளம் | |
2010 | தாந்தோனி | மலையாளம் | ||
2010 | தி திரில்லர் | மாநகர காவல் ஆணையர் மன்மோகன் | மலையாளம் | |
2010 | அந்தரி பந்துவய்யா | தெலுங்கு | ||
2011 | அர்ஜுணன் சாஸத்திரி | மலையாளம் | ||
2011 | கிறிஸ்டியன் பிரதர்ஸ் | ரெஞ்சித் | மலையாளம் | |
2012 | ஏதோ செய்தாய் என்னை | நம்பி | தமிழ் | |
2012 | குஞ்சலியன் | சுரேஷ் வர்மன் | மலையாளம் | |
2012 | அஜந்தா | மலையாளம் | ||
2012 | மை பாஸ் | மேத்யூ ஆப்ரகாம் | மலையாளம் | |
2012 | எம்.எல்.ஏ மணி பாதம் கிளாசம் குஸ்தியம் | மலையாளம் | ||
2013 | ரீபியன் | சிவ சுப்பிரமணியன் | மலையாளம் | |
2013 | குரொகடைல் லவ் ஸ்டோரி | டி.எப்.ஒ | மலையாளம் | |
2014 | 1: நேனோகாடின் | சந்திரசேகர் | தெலுங்கு | |
2014 | ரிங் மாஸ்டர் | இராஜு | மலையாளம் | |
2015 | இவன் மரியாதராமன் | இந்திரசிம்மன் சூரியசிம்மன் |
மலையாளம் | |
2015 | சீமந்துடு | மேகனாவின் தந்தை | தெலுங்கு | |
2016 | கல்யாண வைபோகம் | திவ்யாவின் தந்தை | தெலுங்கு | |
2016 | ஜெண்டில்மேன் | ராம்பிரகாஷ் | தெலுங்கு | |
2016 | ஆட்டாடுகுண்டாம் ரா | ஆனந்த் ராவ் | தெலுங்கு | |
2016 | ஓஷாம் | கார்த்திகேயன் | மலையாளம் | |
2017 | மிஸ்டர் | சாயின் தந்தை | தெலுங்கு | |
2017 | திக்கா | மதன்மோகன் | தெலுங்கு | |
2017 | ரங்கூன் | மாவட்ட வருவாய் ஆய்வாளர் சையத் நவாசுதின் | தமிழ் | |
2017 | உன்னதி ஒக்கடே சிந்தகி | அபியின் தந்தை | தெலுங்கு | |
2017 | வில்லன் | தினேஷ் தரகன் | மலையாளம் | |
2017 | யுத்தம் சரணம் | தெலுங்கு | ||
2018 | வ்யாசாச்சி | தெலுங்கு | ||
2018 | ஜுவா | தெலுங்கு | ||
2019 | சை ரா நரசிம்ம ரெட்டி | குமார மல்லாரெட்டி | தெலுங்கு | |
2019 | மகரிஷி | ராமாவரம் மாவட்ட ஆட்சியர் | தெலுங்கு | |
2019 | டியர் காம்ரேட | பாபியின் தந்தை | தெலுங்கு | |
2020 | ஐ.ஐ.டி கிருஷ்ணமூர்த்தி | சீனிவாச ராவ் | தெலுங்கு |
தொலைக்காட்சி தொடர்கள்
ஆண்டு | தொடர் | மொழி | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | நிப்புலண்டி நிஜம் | தெலுங்கு | ஈடிவி | |
2001 | சிகரம் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2001 | சூலம் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2004 | ஆலிபழம் | மலையாளம் | சூர்யா தொலைக்காட்சி | |
2005 | கடமட்டத்து கதனார் | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2006 | ஏழாம் கடலினக்கரே | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2007 | சுவாமி அய்யப்பன் | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2010–2012 | இதயம் | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2011 | தேவிமகாத்மியம் | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2012 | வீர மார்த்தாண்டவர்மா | மலையாளம் | சூர்யா தொலைக்காட்சி | |
2012 | தோஸ்த் | மலையாளம் | கைரளி தொலைக்காட்சி | |
2015 | ஸ்பந்தனம் | மலையாளம் | சூர்யா தொலைக்காட்சி | |
2015 | 7 ராத்திரிகள் | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2016–2017 | காயாம்குளம் கொச்சுன்னியுடே மக்கன் | மலையாளம் | சூர்யா தொலைக்காட்சி | |
2018 | லஹிரி லஹிரி லஹிரிலோ | தெலுங்கு | ஈடிவி | |
2020-தற்போது | அம்மாயாரியந்தே | மலையாளம் | ஏஷ்யாநெட் | |
2020-தற்போது | அன்பே வா | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
2021-தற்போது | ருத்ரமாதேவி | தெலுங்கு | ஸ்டார் மா |
குறிப்புகள்
- ↑ "Google Groups". http://groups.google.com/group/rec.arts.movies.local.indian/browse_thread/thread/325160ecb408a6ad/bf2a05fc0546286b?pli=1.
- ↑ "Rediff On The NeT, Movies: Our weekly box office update". Rediff. http://www.rediff.com/movies/2000/jun/27box.htm.
- ↑ "rediff.com, Movies: Gossip from the southern film industry". Rediff. 2000-06-30. http://www.rediff.com/entertai/2000/jun/30spice.htm.
- ↑ Nayar, Parvathi (25 June 2010). "Jewel of Indian cinema". AsiaOne. http://www.asiaone.com/News/Latest+News/Asia/Story/A1Story20100625-223964.html.
- ↑ Ramya Kannan (9 August 2002). "Facts on films". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140926102037/http://www.thehindu.com/thehindu/lf/2002/08/09/stories/2002080906920200.htm.
- ↑ 6.0 6.1 "Actor Anand - official website" இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171024205621/http://actoranand.com/about-anand/.
- ↑ 7.0 7.1 "Anand". http://www.imdb.com/name/nm0025606/bio?ref_=nm_ov_bio_sm/.
- ↑ "Burglars strike at actor Anand's house". 2008-08-01 இம் மூலத்தில் இருந்து 2013-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131119090740/http://articles.timesofindia.indiatimes.com/2008-08-01/chennai/27920283_1_anand-security-guard-burglars-strike.