அறிவியல் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.

தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.

தேவை

ஆய்வுக்கு, பண்பாட்டுக்கு

மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது. புதிய பரிமாணங்களில் (paradigms), மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விடயங்களை ஆராய வழி செய்கின்றது.

மேலும் தமிழ் சமுதாயம் சார்ந்த புரிதல்களை வளர்த்துக்கொள்ளவும், தமிழர் தேவைகளை நிறைவு செய்யவும். ஆங்கில உலகால் புறக்கணிக்கப்பட்ட துறைசார் விடயங்களை ஆராயவும் அறிவியல் தமிழ் தேவை. தமிழரின் வரலாறு, பண்பாடு, சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பன்முகத் தேடல்களுக்கு அறிவியல் தமிழ் உதவும்.

கல்விக்கு

தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் ஒரு பெரும் விழுக்காட்டினர் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தேக்க நிலை

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி பரவலாக தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.

இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

வால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை

- அறிவியல் நம்பி [1]

இதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்

இன்றைய தமிழ் வெளிப்பாட்டின் இன்றியமையாத அங்கமாகவுள்ள தொழில் நுட்பச் சொற்கள் பற்றிய ஒரு வரலாற்றினை எழுத முடியாதுள்ளமையை நாம் அறிவோம். தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது

[2]

இதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன் விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை

- சி. ஜெயபாரதன் [3]

திட்டங்களும் வளர்ச்சியும்

ஐரோப்பிய மொழிகள் மற்றும் சீனம், யப்பானிசு போன்ற மொழிகளோடு ஒப்பிடுகையில் அறிவியல் தமிழ் தேக்க நிலையில் இருந்தாலும், இதர மொழிகளோடு ஒப்புடுகையில் அறிவியல் தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது.

தமிழில் நெடுங்காலமாக நிகண்டுகளும், அகராதிகளும் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் பல கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. கணினியியல், சூழலியல், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் பொது வாசகருக்கான இதழ்கள் வெளி வருகின்றன. இவை அறிவியல் தமிழுனின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.

தமிழ்நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளும் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

ஆய்வுக் கட்டுரைகள்

"https://tamilar.wiki/index.php?title=அறிவியல்_தமிழ்&oldid=11008" இருந்து மீள்விக்கப்பட்டது