பிராமணத் தமிழ்
Jump to navigation
Jump to search
பிராமணத் தமிழ் (Brahmin Tamil) என்பது தமிழ் மொழியின் ஒரு வழக்கு மொழியாகும். இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணர்கள் ஆவர். இத்தமிழ் வழக்கில் அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்
பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அகம் - வீடு
- அத்திம்பேர் - அத்தையின் கணவர் (அத்தை அன்பர்), அக்காவின் கணவர்
- அம்மாஞ்சி - தாய் மாமாவின் மகன் (அம்மான் சேய்)
- அம்மங்கார் / அம்மாங்காள் - தாய் மாமாவின் மகள்
- ஆம்படையான் - கணவன் (அகமுடையான்)
- ஆம்படையாள் - மனைவி (அகமுடையாள்)
- நன்னா - நன்றாக
- வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
- ஓய் - முன்னிலை விளி
- பிள்ளாண்டான் - மகன் (பிள்ளை ஆண்டவன்)
- பட்டவர்த்தனமா - தெளிவாக
- செத்த நேரம் - சற்று நேரம்
- நாழி ஆயிடுத்து - நாழிகை ஆகிவிட்டது
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு
- ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
- பேசிண்டு - பேசிக்கொண்டு
(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள்
- வந்தேள் - வந்தீர்கள்
- போனேள் - போனீர்கள்
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது
- வந்துடுத்து - வந்துவிட்டது
- போயிடுத்து - போய்விட்டது
(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று
- தோணித்து - தோன்றிற்று
(வினை)+அறது- (வினை)+ கிறது
- வறது - வருகிறது
- படுத்தறது - படுத்துகிறது
- வறான் - வருகிறான்
- அவா(ள்) - அவர்கள்
- பெரியவா - பெரியவர்கள்
- வந்தா - வந்தார்கள்
- வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
- போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?