நற்றமிழ்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தனித்தமிழ் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை] நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது.[சான்று தேவை] ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைக் கொண்டது.[தெளிவுபடுத்துக] அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்குப் பயன்படும் சொற்கள்), அனைத்துலகக் கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவிர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.[சான்று தேவை]