செந்தமிழ்
Jump to navigation
Jump to search
- சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளை தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகின்றது. இது ஒரு வழக்கே தவிர, அரசு நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட சீர்தரம் அல்ல. சீனம் போன்ற பிறமொழிகளைப் போலன்றி வட்டார மொழிகளுக்கும் செந்தமிழுக்கும் இருக்கும் இடைவெளி சிறியதே, ஆகையால் செந்தமிழை தமிழர்கள் இயல்பாகவே பயன்படுத்துகின்றார்கள்.
- "மதுரையை மையமாகக் கொண்டு, மிகப் பழங்காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது. இந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு, மற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக இருந்தது. இதன் கட்டுத் திட்டங்களை, இடைக்கால உரையாசிரியர்களின் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட, (கூட்டம், அவை, மதச் சங்கம், கல்லூரி என்ற பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட) ஓர் இலக்கிய, கலாச்சார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன. இது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய செய்தி. ஏனெனில், மதுரையின் செப்பமான இலக்கிய மொழியிலிருந்து தற்கால தமிழ் வரை ஒரு நேரடியான வளர்ச்சி முறையை நாம் படிப்படியாக காட்டுதல் கூடும்." [1]
- "இந்த செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட வட்டார மொழி பிற்காலத்தில் செந்தமிழ் என்று குறிப்பிடப்பட்டது; அதன் வளர்ச்சிக் காலத்தில் அது வாய்ப் பேச்சுக்கள் பெறும் வளர்ச்சியைப் பெற்றது; அது நிலைத்து "இலக்கிய" மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை அடைந்த பிறகு மக்களால் பேசப்படவில்லை; அது இலக்கியத்திற்கே உரிய மொழியாகிவிட்டது..." [2]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 224.
- ↑ கமில் ஸ்வெலபில் ஜனவரி 1962 எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரையிலிருந்து: நூல்: வ. விஜயபாஸ்கரன் தொகுத்தது. (2001). சரஸ்வதி களஞ்சியம். சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 224.