இலக்கணம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலக்கணம்
இயக்கம்சந்திரசேயன்
தயாரிப்புஎம். சி. சண்முகம்
கதைசந்திரசேயன்
இசைபவதாரிணி
நடிப்புவிஷ்ணு பிரியன்
உமா
ஒளிப்பதிவுகே. வி. மணி
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்நன்நெறி பாண்டியன்
வெளியீடுதிசம்பர் 22, 2006 (2006-12-22)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இலக்கணம் (Ilakkanam) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான சந்திரசேயன் இயக்கினார். இப்படத்தில் புதுமுகம் விஷ்ணு பிரியன், உமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வினு சக்ரவர்த்தி, பாலா சிங், காதல் சுகுமார், சிட்டி பாபு, சத்தியப்பிரியா, அஞ்சலி தேவி, சபிதா ஆனந்த், ரோகினி ராஜஸ்ரீ ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். எம். சி. சண்முகம் தயாரித்த இப்படத்திற்கு, பவதாரிணி இசை அமைத்தார். படமானது 22 திசம்பர் 2006 அன்று வெளியானது. இப்படம் சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை வென்றது.[1][2][3]

நடிகர்கள்

தயாரிப்பு

விஷ்ணுபிரியன் என்ற திரைப்பெயரோடு ராம் என்ற புதுமுகமும் நாயகராகவும், உமா நாயகிதாகவும் இப்படதில் நடிக்க ஒப்பந்தமாயினர்.[4][5] படம் வெளிவருவதற்கு முன்பு, திரைப்பட தயாரிப்பாளர் எம். சி. சண்முகமும், இயக்குநர் சந்திரசேயனும் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். அவர் படத்தை ரசித்ததாகவும், பவதாரிணியின் இசையால் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.[6]

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பவதாரிணி அமைத்தார். 2006 இல் வெளியான இந்த இசைப்பதிவில், சுப்பிரமணிய பாரதி, பாரதிதாசன், பிறைசூடன், பா. விஜய், சந்திரசேயன் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன.

எண் பாடல்
1 "மசிலா மணியே"
2 "ஊருக்கு நல்லது"
3 "புதியதோர் உலகம்"
4 "தங்கிடுமா"
5 "திருவே நின்னை"
6 "உனக்கே என் அவயம்"

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இலக்கணம்_(திரைப்படம்)&oldid=30855" இருந்து மீள்விக்கப்பட்டது