வேதாளம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேதாளம்
இயக்கம்சிவா
தயாரிப்புஏ. எம். ரத்னம்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புஅஜித்குமார்
சுருதி ஹாசன்
லட்சுமி மேனன்
சூரி
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புரூபன்
கலையகம்சிறீ சூர்யா மூவிசு
வெளியீடு10 நவம்பர் 2015
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு68 கோடி (US$8.5 மில்லியன்)[1]
மொத்த வருவாய்155 கோடி (US$19 மில்லியன்)[2]

வேதாளம்[3] (Vedalam) சிவாவின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படம் 2015 தீப ஒளித்திருநாளன்று வெளியானது.[4] இப்படத்தின் இயக்குநர் சிவா, அஜித் குமார் நடிப்பில் ஏற்கெனவே வெளியான வீரம் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அஜித் குமாரின் ஆரம்பம், என்னை அறிந்தால் திரைப்படங்களை தயாரித்த ஏ. எம். ரத்னம் தயாரித்துள்ளார்.[5] இப்படம் 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதிகார பூர்வ பெயரிடுவதற்கு முன்னதாக இத்திரைப்படம் தல 56 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இப்படம் வசூல் வேட்டை புரிந்து, விநியோகஸ்தர்களுக்கு 30 சதவிகிதம் வரை லாபம் ஈட்டி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

நடிகர்கள்

பாடல்கள்

அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.[6]

வேதாளம்
இசை
வெளியீடு16 அக்டோபர் 2015 (2015-October-16)
ஒலிப்பதிவு2015
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்சிறீ சாய்ராம் கிரியேசன்சு
அனிருத் ரவிச்சந்திரன் காலவரிசை
'நானும் ரவுடி தான்
(2015)
வேதாளம் 'தங்கமகன்
(2015)
பாடல்கள்
# பாடல்உருவாக்கம்பாடகர்(கள்) நீளம்
1. "வீர விநாயகா"  விவேகாஅனிருத், விஷால் சேகர் 4:23
2. "டோன்ட் யூ"  மதன் கார்க்கிசுருதி ஹாசன், சக்திசிறீ கோபாலன் 4:58
3. "உயிர் நதி கலங்குதே"  விவேகாரவி சங்கர் 3:05
4. "தெறி தெறி தீம்"  சிவாஅனிருத் 1:52
5. "ஆலுமா டோலுமா"  ரோகேஷ்அனிருத், பாத்ஷா 4:20

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சிவா இயக்கிய திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=வேதாளம்_(திரைப்படம்)&oldid=37864" இருந்து மீள்விக்கப்பட்டது