சிவா (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
சிவா | |
---|---|
பிறப்பு | சிவகுமார் ஜெயக்குமார் சென்னை, தமிழ்நாடு, |
பணி | ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 முதல் தற்போது வரை |
சிவா தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் பரவலாக அறியப்படுகிறார். அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[1][2] பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய வேதாளம் திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் உருவான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[1]
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | இசை | ஒளிப்பதிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
2008 | சவுர்யம் | தெலுங்கு | கோபிசந்த், அனுஷ்கா | மணிசர்மா | வெற்றி | |
2009 | சங்கம் | தெலுங்கு | கோபிசந்த், திரிசா | தமன் | வெற்றி | |
2011 | சிறுத்தை | தமிழ் | கார்த்தி, தமன்னா | வித்தியாசாகர் | வேல்ராஜ் | |
2012 | தராவு | தெலுங்கு | ரவி தேஜா, டாப்சி பன்னு, பிரபு | விஜய் ஆண்டனி | வெற்றி | |
2014 | வீரம் | தமிழ் | அஜித் குமார், தமன்னா | தேவி ஸ்ரீ பிரசாத் | வெற்றி | |
2015 | வேதாளம் | தமிழ் | அஜித் குமார், சுருதி ஹாசன்,லட்சுமி மேனன் | அனிருத் ரவிச்சந்திரன் | வெற்றி | |
2017 | விவேகம் | தமிழ் | அஜித் குமார், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் | அனிருத் ரவிச்சந்திரன் | வெற்றி | |
2018 | விசுவாசம் | தமிழ் | அஜித் குமார் | இமான் | வெற்றி |
மேற்கோள்கள்
- ↑ "Ajith's new film starts rolling". IndiaGlitz. 2 December 2011. Archived from the original on 3 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ajith to start Siva film !". Sify. 25 November 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.