ஹரிசரண்
ஹரிசரண் சேஷாத்ரி | |
---|---|
ஹரிசரண் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹரிசரண் சேஷாத்ரி |
பிறப்பு | 20 மார்ச்சு 1987 சென்னை, தமிழ்நாடு , இந்தியா |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2004–நடப்பு |
ஹரிசரண் (Haricharan) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். இவர் தன் பதினேழாவது அகவையில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர் ஜோஷ்வா ஸ்ரீதர் ஆவார். அரங்கேற்ற திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார். 2005இல் காதல் திரைப்படத்தில் இவர் பாடிய "உனக்கென இருப்பேன்" பாடல் தேசிய திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[1] 2010இல் பையா திரைப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த " துளி துளி " என்ற பாடலைப் பாடிய பின் இவர் பிரபலமானார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஹரிசரண் சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தாத்தா பி. எஸ். கணபதி 1960களில் "ஆலாபனா" என்ற பெயரில் ஒலிவாங்கி இல்லாத கருநாடக இசை நிகழ்ச்சிகளின் அமைப்பாளராக இருந்தார். இவருடைய பாட்டி ஸ்ரீமதி அலமேலு கணபதி கணிதத்தில் தேசிய விருது பெற்றவரும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் பணியாற்றியவரும் ஆவார். ஹரிசரணின் தந்தை ஜி. சேசாத்ரி அகில இந்திய வானொலிக் கலைஞராகவும் வங்கி ஊழியராகவும் இருக்கிறார். இவரின் தாயார் லதா பி. எஸ். மேனிலைப்பள்ளியின் நூலக ஆசிரியர் ஆவார். ஹரிசரண் தனது ஏழு வயதிலேயே கர்நாடக இசையை சேது மகாதேவன், கே. வி. நாராயணசுவாமி, டி. எம். பிரபாவதி, பி.எஸ்.நாராயணசாமி ஆகியோரிடமிருந்து கற்றார்.
ஹரிசரண் 2014 இல் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த மாற்றம் ஒன்றுதான் பாடலை இரசினிகாந்துடன் இணைந்து பாடினார்.
பாடிய சில பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் | இசையமைப்பாளர் | உடன்பாடியவர்கள் |
---|---|---|---|---|
2004 | காதல் | "உனக்கென இருப்பேன்" "தொட்டு தொட்டு ௭ன்னை " "காதல்" |
ஜோஷ்வா ஸ்ரீதர் | — ஹரிணி சுதாகர் — |
2005 | பிப்ரவரி 14 | "இது காதலா " | பரத்வாஜ் | |
2006 | பாரிஜாதம் | "உன்னை கண்டேனே" | தரண் | சுருதி |
பட்டியல் | "போக போக பூமி விரிகிறதே" | யுவன் சங்கர் ராஜா | விஜய் யேசுதாஸ், ஹரிணி சுதாகர், சைந்தவி | |
உன்னாலே உன்னாலே | "வைகாசி நிலவே" | ஹாரிஸ் ஜெயராஜ் | மதுஸ்ரீ | |
கலாபக் காதலன் | "மண் மீது " | நிரு | ||
2007 | தீபாவளி | "தொடுவேன் " | யுவன் ஷங்கர் ராஜா | மாயா |
கண்ணாமூச்சி ஏனடா | "மேகம் மேகம்" "அன்று வந்ததும்" |
யுவன் ஷங்கர் ராஜா | சுவேதா மோகன் சங்கர் மகாதேவன், சுவேதா மோகன் | |
வேல் | "ஒற்றைக்கண்ணாலே" | யுவன் சங்கர் ராஜா | சுசித்ரா | |
தொட்டால் பூ மலரும் | "அரபு நாடே" | யுவன் சங்கர் ராஜா | யுவன் சங்கர் ராஜா | |
சென்னை 600028 | "ஜல்சா பண்ணுங்கடா" | யுவன் சங்கர் ராஜா | ரஞ்சித், திப்பு, கார்த்திக், பிரேம்ஜி அமரன் | |
கல்லூரி | "சரியா இது தவறா" "உன்னருகில் வருகையில் " "கல்லூரி" |
ஜோஸ்வா ஸ்ரீதர் | — ஹரிணி சுதாகர் — | |
வாழ்த்துகள் | "பூக்கள் ரசித்தது " "௭ந்தன் வானமும் " "கண்ணில் வந்ததும்" |
யுவன் சங்கர் ராஜா | — மகதி — |
மேற்கோள்கள்
- ↑ "Metro Plus Madurai / Music : Successful note". தி இந்து (Chennai, India). 3 June 2006 இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071209125227/http://www.hindu.com/mp/2006/06/03/stories/2006060300280100.htm.
வெளி இணைப்புகள்
- Successful note பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம்