ஜோஷ்வா ஸ்ரீதர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோசுவா ஸ்ரீதர்
Joshua Sridhar
ஜோசுவாஸ்ரீதர்.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஸ்ரீதர்
பிறப்பு9 மார்ச்சு 1974 (1974-03-09) (அகவை 50)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)Synthesizer, மின்னணு கீபோர்ட், Vocal
இசைத்துறையில்2004 முதல் தற்போதுவரை

ஜோசுவா ஸ்ரீதர் (Joshua Sridhar; பிறப்பு: 1974)[1] என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[2][3] இவர் 2004 திசம்பர் 8 அன்று வெளியான புகழ்பெற்ற படமான காதல்  திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1][4]

துவக்ககால வாழ்கையும் கல்வியும்

ஜோஷ்வா ஸ்ரீதர் சென்னையில் 1974 மார்ச் 9 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் சரவணன் மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் ஆவர். இவர் சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவனின் இராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியில்  1980 முதல் 1990 வரை பயின்றார். மேனிலைக்கல்வி முடித்தது பின்  மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும்  கற்றார். பியானோ படிக்கும்போது அங்கு கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் திருமணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. திருமணத்துக்குப்பின் 1993 இல் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறினார். அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் ஜோஷ்வா ஸ்ரீதராக மாறினார்.  2004 ஆண்டு இவர் கிருத்துவ மதத்தில் இருந்து வெளியேறி இந்துவாக வாழ்ந்து வருகிறார்.

வாழ்க்கை

இளம்வயதிலேயே பியானோவைக்  கற்றுக்கொண்டு இளையராஜாவிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். இசையைப் படிப்பு முடிந்தபின் இளையராஜாவிடம் சேர முயன்று இயலவில்லை. கிறிஸ்தவராக மாறியதை அடுத்து, காஸ்பெல் இசை ஆல்பங்கள் இசையமைக்கும் வாய்ப்பு தேவாலயம் மூலமாகக் கிடைத்தது. தற்செயலாக இந்தப் பாடல்களைக் கேட்ட  திரைப்படப் புல்லாங்குழல் கலைஞர் நவீன் தன்னுடைய ஆல்பங்களுக்குக் கீபோர்ட் வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். தெலுங்குத் திரை இசையமைப்பாளர் கீரவாணி, அடுத்து, இசையமைப்பாளர் மணிசர்மாவின் முதல் படம் தொடங்கித் தொடர்ந்து மூன்றாண்டுகள் அவருடைய படங்களில் கீபோர்டு வாசித்தார். அதை அடுத்து இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு இசையமைத்து வந்த சந்தீப் சவுதாவிடம் கீபோர்ட் கலைஞராக பணியாற்றினார்.  ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ‘தவுத்’ படங்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்ததால் அவருடைய அறிமுகம் கிடைத்தது. இதன்பிறகு பார்த்தாலே பரவசம்’, ‘லகான்’ ‘காதல் வைரஸ்’, ‘பாய்ஸ்’ எனத் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ரகுமானின் 15 படங்களில் பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்ட் வாசித்தார். இதே நேரத்தில் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களோடும் இசையால் இணைந்தார்.பாய்ஸ் படத்தில் ஜோசுவாவின் திறமையைக் கவனித்த இயக்குநர் ஷங்கர் மூலமாக முதல் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்த பாலாஜி சக்திவேலுவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கிய காதல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து,[5] படம் 2004 திசம்பர் அன்று வெளியானது.

திரைஇசைகள்

ஆண்டு மொழி[6] குறிப்புகள்
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம்
2004 காதல் பிரேமிஸ்தி பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( தமிழ் )
2005 அபாயம் டேஞ்சர்
2006 உயிர் மனோஹரா
2006 சென்னை காதல் ப்ரேமா
2006 அரண் கீர்த்தி சக்ரா
2006 கேம்
2007 அரசு
2007 நினைத்து நினைத்துப் பார்த்தேன் ப்ரேமா
2007 கல்லூரி கலாசால
2009 லவ் குரு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் )
2010 காண பஜானா பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் )
2010 ஹுடுகா ஹுடுகி
2010 தேவதாஸ்
2011 அப்பாவி
2011 வெப்பம்[7] சிகா தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் கிடைத்தது - தமிழ்[8]
2011 வித்தகன்
2011 யுவன் கிராட்டம்
2012 ஜீனியஸ்
2013 விஜ்டல்
2013 கூக்லி பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் )[9]
2014 ஹுச்சுடுகரு
2015 புலண்விசாரணை 2
2015 வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்
2016 "54321"
2016 பறந்துசெல்ல வா

குறிப்புகள்:

  • இசை வெளியீட்டு நாள், திரைப்பட வெளியீட்டு நாளிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.
  • மொழிமாற்றம் அல்லது மறு ஆக்கம் செய்யப்பட்ட ஆண்டு.
  • • ஒன்று அல்லது பிற மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.
  • ♦ மறு ஆக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Joshua Sridhar Biography". Oneindia.in. Greynium Information Technologies. Archived from the original on 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
  2. Joshua Sridhar at the Internet Movie Database
  3. Suganth, M. (29 January 2011). "Joshua says no to spotlight!". Times of India. Times News Network (Bennett, Coleman & Co) இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214180827/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-29/news-interviews/28376217_1_film-music-interviews-tamil. பார்த்த நாள்: 6 July 2013. 
  4. Suganth, M. (22 January 2011). "I don't believe in comebacks: Joshua". Times of India (Bennett, Coleman & Co) இம் மூலத்தில் இருந்து 16 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140816004044/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/I-dont-believe-in-comebacks-Joshua/articleshow/7333854.cms. பார்த்த நாள்: 16 August 2014. 
  5. ம.சுசித்ரா (15 சூலை 2016). "நான் ஓசையமைப்பாளர் அல்ல!". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2016.
  6. "Joshua Sridhar Filmography". Oneindia.in. Greynium Information Technologies. Archived from the original on 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
  7. Srinivasan, Pavitra (11 January 2011). "Veppam's album is no great shakes". Rediff.com. Archived from the original on 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
  8. Ramchander (7 June 2012). "Ajith, Vikram, Surya nominated for SIIMA Best Actor". Oneindia.in. Greynium Information Technologies. Archived from the original on 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 16 August 2014.
  9. "61st Idea Filmfare Awards - Complete Nominations List". Times of India (Bennett, Coleman and Co). 12 July 2014 இம் மூலத்தில் இருந்து 16 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140816003344/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/61st-Idea-Filmfare-Awards-Complete-Nominations-List/articleshow/38267114.cms. பார்த்த நாள்: 16 August 2014. 
"https://tamilar.wiki/index.php?title=ஜோஷ்வா_ஸ்ரீதர்&oldid=7968" இருந்து மீள்விக்கப்பட்டது