ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | |
---|---|
இயக்கம் | பாரதி கண்ணன் |
தயாரிப்பு | புஷ்பா கந்தசாமி |
கதை | பாரதி கண்ணன் |
இசை | தேவா[1] |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் ராம்கி (நடிகர்) சங்கவி (நடிகை) பானுப்ரியா (நடிகை) |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
கலையகம் | கவிதாலயா |
வெளியீடு | 13 ஏப்ரல் 2001 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (Sri Raja Rajeshwari) என்பது 2001 ஆண்டு வெளியான தமிழ் பக்தி திரைப்படம் ஆகும். பாரதி கண்ணன் இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ராம்கி, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பானுப்ரியா, நிழல்கள் ரவி, வடிவேலு, வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். புஷ்பா காந்தசாமி தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படம் 13 ஏப்ரல் 2001 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- ரம்யா கிருஷ்ணன் இராஜராஜ ராஜேஸ்வரி
- ராம்கி (நடிகர்) இராசையா மற்றும் இராஜா (இரவீந்திரநாத்தின் மகன்)
- சங்கவி (நடிகை) மீனாட்சி
- பானுப்ரியா (நடிகை) சக்தி அம்மன்
- வடிவேலு (நடிகர்) மைனர் பாண்டியன் மற்றும் நாட்டமை
- நிழல்கள் ரவி தொழிலதிபர் இரவீந்திரநாத்தாக
- பொன்னம்பலம் சங்கராவாக
- வினு சக்ரவர்த்தி பாம்பு சித்தர் "இராஜலிங்கம் சுவாமி"யாக
- டெல்லி கணேஷ் இராஜேஸ்வரியின் தந்தையாக
- மலேசியா வாசுதேவன் மீனாட்சியின் தந்தையான சிந்தலகரை வெக்கலையம்மன் பூசாரியாக
- தியாகு பிரபாகரனாக
- பல்லவி இராஜேஷ்வரியின் தாயாக
- கே. ஆர். வத்சலா சங்கரனின் மனைவியாக
- இந்து பிரபாகரனைக் கொன்ற கட்டுவசி பெண்ணாக
- வி. கே. ராமசாமி சோதிடராக
- எஸ். என். பார்வதி இராஜேஸ்வரியின் பாட்டியாக
- சிங்கமுத்து காட்டுவாசி தலைவர்
- போண்டா மணி
- "பயில்வான்" கிருஷ்ணசாமி தேவர்
- பாரதி கண்ணன்
- நளினி பாடலில் சிறப்புத் தோற்றம் ("மருவத்தூர் ஓம் சக்தி")
தயாரிப்பு
ராம்கி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த சில காட்சிகள் தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலம் மற்றும் இஞ்சிமேடு சிவாலயம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தபட்டது. பாடலாசிரியர் காளிதாஸ் எழுதிய 165 அம்மன்களின் பெயர்களைக் கொண்ட ஒரு பாடல் படத்தில் உள்ளது. இந்த பக்தி பாடலுக்காக தமிழ்நாட்டின் 108 'அம்மன்' கோயில்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, நளினி "மருவத்தூர் ஓம் சக்தி" பாடலில் இடம்பெற்றுள்ளார். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடினார்.[2]
இசை
இப் படத்திற்கு தேவா இசையமைத்தார். தேவா இசையமைத்த முதல் பக்தி படம் இது. இந்த படத்தின் பாடல் பதிவில் 6 பாடல்கள் உள்ளன. பாடல்களை காளிதாசன், விவேகா, பாரதிபுதிரன், சீர்காழி கோவிந்தராஜன் (ஸ்லோகம்), முரளிகிருஷ்ணன் (ஸ்லோகம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.[3]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|---|
1 | "சிந்தல காரையில்" | சித்ரா | காளிதாசன் |
2 | "காதிலே மான்" | சீர்காழி கோ. சிவசிதம்பரம் | பாரதிபுதிரன் |
3 | "மருவத்தூர் ஓம் சக்தி" | சித்ரா | காளிதாசன் |
4 | "ராசவே என்னை" (இருவர்) | அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் | விவேகா |
5 | "ராசவே என்னை" (பெண்) | அனுராதா ஸ்ரீராம் | |
6 | "திருச்சேந்தூர் கடல்" | கோவை கமலா, கிருஷ்ணராஜ் | காளிதாசன் |
மேற்கோள்கள்
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0002379
- ↑ https://web.archive.org/web/20010528101456/http://www.chennaionline.com/location/rajeswari.asp
- ↑ "Sri Raja Rajeswari (Original Motion Picture Soundtrack)". Apple Music. https://music.apple.com/vn/album/sri-raja-rajeswari-original-motion-picture-soundtrack/1400291403.
வெளி இணைப்புகள்
- hindunonet.com, தி இந்து, 2001 ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரியின் திரைப்பட விமர்சனம் பரணிடப்பட்டது 2007-02-09 at the வந்தவழி இயந்திரம்
- geocities.com, " ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி பாலாஜி பாலசுப்பிரமணியம் எழுதிய திரைப்பட விமர்சனம்"
- wideband.bigflix.com, ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி திரைப்பட விவரங்கள் பரணிடப்பட்டது 2008-08-04 at the வந்தவழி இயந்திரம்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- இந்து பக்தி திரைப்படங்கள்
- 2001 தமிழ்த் திரைப்படங்கள்
- ரம்யா கிருஷ்ணன் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சிங்கமுத்து நடித்த திரைப்படங்கள்