முத்தமிழ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.
இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.
- நாடகத்தமிழே காலத்தால் முந்தையது ஆகும். அது உடலசைவு மொழியில் தொடங்கி விளையாட்டு, நடனம், போர், போராட்டம் என்று தொடர்ந்து இன்றைய திரைத்துறை வரை நீள்வது ஆகும்.
- இசைத்தமிழ் எண்ண இயக்கத்தில் தொடங்கி, வாஆஆஆ போஓஓஓ என்று நெட்டொலியால் வளர்ந்து இன்றைய திரையிசை வரை வளர்ந்தது ஆகும்.
- இயற்றமிழ் இயல்பான பேச்சு, எழுத்து, இலக்கியங்கள், பல்வேறு துறைகள் என வளர்ந்தது ஆகும். இன்றைக்கு கணினி வரையிலான கல்வி இதன் விரிவு ஆகும்.