பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,369 (2011[update]) • 1,932/km2 (5,004/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4.85 சதுர கிலோமீட்டர்கள் (1.87 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/pappireddipatti |
பாப்பிரெட்டிப்பட்டி (ஆங்கிலம்:Pappireddipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. இவ்ஊரில் நீதிமன்றம் உள்ளது.பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 17 கி.மீ. தொலைவில் உள்ள பொம்மிடியில் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு மேற்கில் தருமபுரி 51கி.மீ.; கிழக்கில் தீர்த்தமலை 36 கி.மீ.; வடக்கில் அரூர் 21 கி.மீ.; தெற்கில் சேலம் 44 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
4.85 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,458 வீடுகளும், 9,369 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pappireddipatti Population Census 2011