தருமர் (உரையாசிரியர்)
Jump to navigation
Jump to search
தருமர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நூல் உரையாசிரியர்களில் ஒருவர். திருக்குறள், நாலடியார் பாடல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளில் “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு குறட்பாக்களுக்கு மட்டும்[தெளிவுபடுத்துக (தட்டுப்பிழையோ?)] தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
நாலடியார் பாடல்கள் 400-க்கும் இவரது உரை உள்ளது.
- இவரது உரை பதுமனார் உரையைத் தழுவிச் செல்லும் பாங்கு இவரைப் பதுமனாரின் மாணாக்கர் எனக் கொள்ள வைக்கிறது.
- இவரது உரையில் காணப்படும் பாடல் ஒன்று இவரைத் "தண்டார்ப் பொறைத் தருமன்" எனக் குறிப்பிடுகிறது.
- இவரது உரைக்கு இவர் எழுதியுள்ள விநாயகர் வணக்கப் பாடல் 12ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல் 'பாலும் தெளிதேனும்' என்னும் பாடல் போல் அமைந்துள்ளதால் இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு எனல் பொருத்தமாகிறது.
- இவர் நாலடியார் நூலைப் பகுப்பு செய்துள்ள பாங்கை இந்த உரைநூலுக்கு எழுதப்பட்டுள்ள பாயிரப் பாடல் குறிப்பிடுகிறது.
- அறவியல் 13
- அரசர்க்கு உரிய பொருளியல் 24
- இன்பத்துப் பால் 3
- இவரது உரையில் வடமொழித் தொடர் வருகிறது.[1]
- இவர் சீவக சிந்தாமணி பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.[2]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005