தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1.சாமி பழனியப்பன் கவிதைகள் (முதல் பரிசு), 2. காலடியில் சில ஆகாயங்கள் (முதல் பரிசு) |
1. சாமி பழனியப்பன் 2. ந. இறைவன் |
1. கமலாலயம், சென்னை. 2. மலர்கள் பதிப்பகம், கோயம்புத்தூர். |
2 | நாவல் | 1. ஜய ஜய சங்கர (முதல் பரிசு) 2. காஞ்சிக் கதிரவன் (இரண்டாம் பரிசு) |
1. ஜெயகாந்தன் 2. கோவி. மணிசேகரன் |
1. ஐந்திணைப் பதிப்பகம், சென்னை 2. வானதி பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. உலகப் பெருங்கவிஞர் கம்பர் (முதல் பரிசு) 2. தமிழ் மொழி வரலாறு (முதல் பரிசு) |
1. இரா. வ. கமலக்கண்ணன் 2. டாக்டர் சு. சக்திவேல் |
1 & 2 மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. தமிழரின் தாயகம் (முதல் பரிசு) 2. அண்ணாயியம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் க. ப. அறவாணன் 2. டாக்டர் கு. விவேகானந்தன் |
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2. குமரன் வெளியீடு, சென்னை. |
5 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. சித்திரப் பூத்தையல் (முதல் பரிசு) 2. வீட்டைக் கட்டிப் பார் (இரண்டாம் பரிசு) |
1. வை. சரோஜினி 2. சி. எச். கோபிநாத்ராவ் |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை. |
6 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. தலைவலி மருத்துவம் (முதல் பரிசு) 2. குழந்தை நலம் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் கா. லோகமுத்துக் கிருட்டிணன் 2. டாக்டர் பா. சேரன் |
1. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. நறுமலர் பதிப்பகம், சென்னை. |
7 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | ----- | ----- | ----- |
8 | சிறுகதை | 1. திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல (முதல் பரிசு) 2. நிஜங்களும் நிழல்களும் (இரண்டாம் பரிசு) |
1. ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் 2. அரசு மணிமேகலை |
1. சுதா பதிப்பகம், சென்னை. 2. திருமகள் நிலையம், சென்னை. |
9 | நாடகம் | 1. அம்பா பலி (முதல் பரிசு) 2. கவரிமான் (இரண்டாம் பரிசு) |
1. பேராசிரியர் கா. அரங்கசாமி 2. டாக்டர் ஆ. கந்தசாமி |
1. குமரகுருபரன் நினைவு வெளியீடு, உடுமலைப்பேட்டை. 2. எழில் முருகன் பதிப்பகம், சென்னை. |
10 | கவின் கலைகள் | 1. தமிழர் இசை (முதல் பரிசு) 2. தென்னக இசையியல் (இரண்டாம் பரிசு) |
1. ஏ. என். பெருமாள் 2. சே. ச. செல்லத்துரை |
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2. வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். |
11 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. வீரமுரசு சுப்பிரமணிய சிவா (முதல் பரிசு) 2. திராவிடத் தலைவர் கி. நடேசனார் வாழ்வும் தொண்டும் (இரண்டாம் பரிசு) |
1. பெ. சு. மணி 2. கோ. குமாரசுவாமி |
1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2. பாரி நிலையம், சென்னை. |
12 | வரலாறு, தொல்பொருளியல் | 1. கலை வளர்த்த திருக்கோயில்கள் (முதல் பரிசு) 2. வரலாற்றுக் கருவூலம் (இரண்டாம் பரிசு) |
1. இரா. கலைக்கோவன் 2. தாமரைக்கண்ணன் |
1. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 2. சேகர் பதிப்பகம், சென்னை. |
13 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | விவசாயக் களஞ்சியம் | அரு. சோலையப்பன் | அருணோதயம், சென்னை |
14 | சிறப்பு வெளியீடுகள் | 1. காவ்டி சிந்தும் கவிஞன் வரலாறு (முதல் பரிசு) 2. தமிழ் எழுதப் படிக்க எளிய வழிமுறை (இரண்டாம் பரிசு) |
1. அரங்க. சீனிவாசன் 2. தி. முத்துக்கண்ணப்பர் |
1. சேகர் பதிப்பகம், சென்னை 2. அதிபத்தர் பதிப்பகம், சென்னை. |
15 | கல்வி, உளவியல் | ----- | ----- | ----- |
16 | குழந்தை இலக்கியம் | 1.மயில் தோகை (முதல் பரிசு) 2. நல்ல முத்து (இரண்டாம் பரிசு) |
1. பல்லவன் 2. டாக்டர் பூவண்ணன் |
1. குமணன் பதிப்பகம், திருக்கழுக்குன்றம். 2. வானதி பதிப்பகம், சென்னை. |