தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2000

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் நூலின் பிரிவு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 மரபுக்கவிதை இந்திர காவியம் அல்லது நான்மறை விளக்கம் முனைவர் சூ. செல்லப்பா இ. ஆ. ப அருள் வள்ளலார் கல்வி அறக்கட்டளை, சென்னை.
2 புதுக்கவிதை உன்னை அறிந்தால் முனைவர் பத்மாவதி விவேகானந்தன் டாக்டர் வி. கோபிநாத், சென்னை.
3 புதினம் ரத்த உறவு தி. மாரிமுத்து (யூமா. வாசுகி) தமிழினி,சென்னை.
4 சிறுகதை ஒரு மாலை பூத்து வரும் மேலாண்மை பொன்னுசாமி கங்கை புத்தக நிலையம், சென்னை.
5 நாடகம் (உரைநடை, கவிதை ) கருஞ்சுழி முனைவர் வ. ஆறுமுகம் தலைக்கோல், புதுச்சேரி.
6 சிறுவர் இலக்கியம் விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள் பாபநாசம் குறள்பித்தன் (த. வெ. கண்ணன்) ஸ்ரீ கமலம் பதிப்பகம், சென்னை.
7 திறனாய்வு கவிதை அல்லது அழகு பின்னலூர் மு. விவேகானந்தன் வாலண்டினா பப்ளிகேசன்ஸ், சென்னை.
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் சங்க இலக்கியக் களஞ்சியம் முனைவர் க. அமிர்தலிங்கம் மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
9 பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் தம்மபதம் முனைவர் என். ரமணி கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.
10 நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) ----- ----- -----
11 அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் கொங்கு வட்டாரச் சொல்லகராதி பெருமாள் முருகன் குருத்து, கோபிசெட்டிபாளையம்.
12 பயண இலக்கியம் அகில இந்திய ரத்தினஹார புனித யாத்திரை வசந்தா வில்வநாதன் நர்மதா பதிப்பகம், சென்னை.
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு தொழிற்சங்க சிற்பி பி. ஆர். கே. சர்மா ஜெயலட்சுமி சர்மா, வசந்தா அய்யர் ஜெயலட்சுமி சர்மா, சென்னை.
14 நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு தமிழிய வாழ்வில் கல்லும் சொல்லும் க. குழந்தைவேலன் பைந்தமிழ்ப் பாசறை, சென்னை.
15 கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் விண்வெளி 2057 நெல்லை சு. முத்து திருவரசு புத்தக நிலையம், சென்னை.
16 பொறியியல், தொழில்நுட்பம் பயன் தரும் படிகங்கள் பா. சந்தான ராகவன், பெ. இராமசாமி கே. ஆர். யூ. பதிப்பகம், கும்பகோணம்.
17 மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) டார்வின் ஆய்வும் விளைவும் ப. செங்குட்டுவன் ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
18 சட்டவியல், அரசியல் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் - 1983 இர. கிருஷ்ணன் சி. சீதாராமன் அண்டு கோ, சென்னை.
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் மூலதன அங்காடி கோ. சடகோபன் அமுதன் பதிப்பகம், கும்பகோணம்.
20 மருந்தியல், உடலியல், நலவியல் பலவித தலைவலிகளும் தீர்வுகளும் மருத்துவர். எஸ். எம். பாலாஜி மருத்துவர் எஸ். எம். பாலாஜி (சொந்தப் பதிப்பு), சென்னை.
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) வீட்டு மருத்துவத்தில் நாட்டு மூலிகைகள் மருத்துவர் சுப. சதாசிவம் வானதி பதிப்பகம், சென்னை.
22 சமயம், ஆன்மீகம், அளவையியல் சித்தர் தத்துவம் பா. கமலக்கண்ணன் வானதி பதிப்பகம், சென்னை.
23 கல்வியியல், உளவியல் கல்வியியல் மதிப்பீடு புள்ளியியல் ஆராய்ச்சி முனைவர் கோகிலா தங்கசாமி (எஸ். தங்கசாமி) அனிச்சம் புளூம்ஸ், காந்திகிராமம்.
24 வேளாண்மையியல், கால்நடையியல் கற்பக விருட்சம் தென்னை சீ. சுப்பிரமணியன், ஆர். எம். விஜயகுமார், வா. கு. பார்த்திபன், இரா. செ. அழகிய மணவாளன் கற்பகம் பதிப்பகம் (தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்), தமிழ்நாடு.
25 சுற்றுப்புறவியல் ----- ----- -----
26 கணிணியியல் விண்டோஸ் 2000 ராஜமலர் (அலெக்சாண்டர் ராயப்பா) நர்மதா பதிப்பகம், சென்னை.
27 நாட்டுப்புறவியல் சல்லிக்கட்டு முனைவர் ஆ. முத்தையா அன்றில் பதிப்பகம், மதுரை.
28 வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ----- ----- -----
29 இதழியல், தகவல் தொடர்பு ----- ----- -----
30 பிற சிறப்பு வெளியீடுகள் உன்னால் மட்டும்தான் முடியும் டி. எஸ். ராகவன் வானதி பதிப்பகம், சென்னை.

குறிப்புகள்

  • நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்), சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், இதழியல் மற்றும் தகவல் தொடர்பு, விளையாட்டு ஆகிய ஐந்து வகைப்பாட்டில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறைகளின்படி இல்லாததால் பரிசுக்குக் கருதப்படும் நிலை எழவில்லை.