க. ப. அறவாணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
க. ப. அறவாணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. ப. அறவாணன்
பிறப்புபெயர் அருணாசலம்
பிறந்ததிகதி (1941-08-09)ஆகத்து 9, 1941
பிறந்தஇடம் தஞ்சாவூர் மாவட்டம்
இறப்பு திசம்பர் 23, 2018(2018-12-23) (அகவை 77)
பணி தமிழ்ப்பேராசிரியர்
தேசியம் இந்தியா
கல்வி எம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி.
அறியப்படுவது எழுத்தாளர்
துணைவர் தாயம்மாள் அறவாணன்
பிள்ளைகள் அருள்செங்கோர்,

க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (தஞ்சாவூர் மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.

கல்வி

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.

பணி

  • தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
  • முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
  • தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
  • ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல்.
  • தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை.
  • தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி.
  • துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி.

எழுதிய நூல்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;

  1. அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
  2. அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
  3. அற்றையநாள் காதலும் வீரமும் (முனைவர் பட்ட ஆய்வேடு); தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
  4. கவிதை கிழக்கும் மேற்கும்; 1975, தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29. [2]
  5. காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
  6. கல்வித்துறை உருப்பட
  7. சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[3]
  8. தொல்காப்பிய ஒப்பியல்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
  9. தொல்காப்பியக் களஞ்சியம்; 1975; பாரிநிலையம், சென்னை. [2]
  10. தமிழர் தடங்கல்; 1992 மே; தமிழ்க்கோட்டம், 91, இரண்டாவது தெரு, மோகன் நகர், புதுச்சேரி 605 005; பக்.172
  11. தமிழர்தம் தலைமை வழிபாடு
  12. தமிழர்தம் மறுபக்கம்
  13. தமிழரின் தாயகம்; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  14. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
  15. தமிழ்ச்சமுதாய் நோய்கள்
  16. தமிழ்ச்சமுதாய வரலாறு- முதற்பகுதி
  17. தமிழ் மக்கள் வரலாறு[4]
  18. திராவிடர்
  19. படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம்; 1995; கிரணம் கன்ப்யூட்டர் ஒளி அச்சகம், புதுச்சேரி.
  20. பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
  21. பாதையாகு பாறைகள்: வாழ்க்கை முன்னேற்ற வழிமுறைகள்; 1988 திசம்பர்; தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
  22. புரட்சிப்பொறிகள் (கவிதை)
  23. Collected Papers on Tamilogy

பதிப்பித்த நூல்கள்

க. ப. அறவாணன் பின்வரும் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்:

  1. அவிநயம்:மூலமும் உரையும்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]

இதழ் ஆசிரியர்

இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்

  • அறிவியல் தமிழியம்
  • தேடல்
  • முடியும்
  • கொங்கு

பதிப்பாசிரியர்

இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.

உரை

  1. அருங்கலச்செப்பு; சைன இளைஞர் மன்றம், 1-ஏ, போக் சாலை, சென்னை 600 017.

அறவாணர் விருது

இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

விருதுகளும் கௌரவங்களும்

  • தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
  • 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=க._ப._அறவாணன்&oldid=3668" இருந்து மீள்விக்கப்பட்டது