சுதுமலை
சுதுமலை | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°43′0″N 80°00′0″E / 9.71667°N 80.00000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் தென்-மேற்கு |
சுதுமலை (Suthumalai) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக உடுவில், இணுவில், மானிப்பாய், தாவடி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. 2012 கணக்கெடுப்பின்படி, இங்கு 3,770 பேர் வாழ்கின்றனர்.[1]
இந்தக் கிராமத்தில் புகழ்பெற்ற சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் உட்படப் பல சைவக் கோவில்கள் உள்ளன.[2][3] சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு, சிந்மய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும். இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணப்படுகின்றன.
சுதுமலையில் 1987 ஆகத்து 4 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றி புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார். இலங்கை தமிழ் தேசியவாதத்தில் இந்த "சுதுமலைப் பிரகடனம்" ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும்.[4][3]
இங்குள்ள கோவில்கள்
- சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்
- சுதுமலை சிவன் கோயில்
- சுதுமலை முருகமூர்த்தி கோயில்
- சுதுமலை வடக்கு ஈஞ்சடி ஞானவைரவர் கோவில்[7][8]
- சுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் ஆலயம்[9]
சுதுமலையின் புகழ் பூத்தோர்
- ஆ. வி. மயில்வாகனம், கல்வியாளர்
- சோ. கிருஷ்ணராஜா, மெய்யியலாளர், வரலாற்றாளர்
- ஐ. சாந்தன் - ஈழத்து எழுத்தாளர்
மேற்கோள்கள்
- ↑ "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012". Department of Census and Statistics, Sri Lanka. p. 147. http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf.
- ↑ "www.enchadyvairavar.com ஈஞ்சடி வைரவர் கோயில்" இம் மூலத்தில் இருந்து 2015-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150801083255/http://enchadyvairavar.com/.
- ↑ 3.0 3.1 Seevaratnam, N.; Tamils, World Federation of (1989-01-01) (in en). The Tamil national question and the Indo-Sri Lanka Accord. Konark Publishers. https://books.google.com/books?id=o01uAAAAMAAJ&q=suthumalai+amman.
- ↑ Gunaratna, Rohan (1993-01-01) (in en). Indian intervention in Sri Lanka: the role of India's intelligence agencies. South Asian Network on Conflict Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789559519904. https://books.google.com/books?id=vjtuAAAAMAAJ&q=suthumalai+amman+kovil.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0.
- ↑ "Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi". TamilNet. August 21, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23059.
- ↑ "Īccilam-paṟṟai/ Īccilam-pattai, Ińdi-bẹdda, Bẹddē-gama". TamilNet. March 27, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33729.
- ↑ "Cāṭṭi, Kurakkaṉ-cāṭṭi, Kampañ-cāṭṭi, Āvarañ-cāṭṭi, Kāṉṟai-cāṭṭi/ Kāṇṭai-cāṭṭi". TamilNet. September 9, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26671.