இணுவில்
இணுவில் | |
---|---|
Country | இலங்கை |
Province | Northern |
District | Jaffna |
DS Division | Valikamam South |
இணுவில் (Inuvil), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.[1]
அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.
அந்தவகையில் மிகவும் பெயர் பெற்ற இந்த புண்ணிய பூமியில் சித்தர் பெருமகனார்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர் அவர்களுள் வடிவேலர் எனும் சித்தர் பெருமகனார் பரமானந்த வல்லி அம்மன் எனும் ஆலயத்தை பரிபாலித்து சில அற்புதங்களையும் செய்துகாட்டினார் என்பது செவிவழி கதையாக வந்தவை
மற்றும் பிரபல சித்த வைத்தியரான செல்லப்பா பரியாரியார் (அதாவது அந்தகாலத்தில் மருத்துவரை பரியாரியார் என்று கௌரவ அடைமொழி வைத்து கூறுவது வழக்கம்) வாழ்ந்த புண்ணிய பூமி. வைத்தியர் பரம்பரையினர் சித்தர் பரம்பரையினர் வாழ்ந்த அற்புத பூமி.
ஆனாலும் இங்கு வாழ்ந்த ஆதிப் பரம்பரையினரின் வரலாற்றினை சரியான முறையில் இனங்காணமுடிவதில்லை என்பது கவலைக்குரியதொன்றாகும்.
இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற பாடசாலைகள்
இணுவில் தந்த புகழ் பூத்தோர்
- இணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர்
- ஆர். சிவலிங்கம் (உதயணன்) - சிறுகதை, புதின எழுத்தாளர்
- பண்டிதர் கா. செ. நடராசா
- இ. இரத்தினம்
- சிதம்பர திருச்செந்திநாதன் - எழுத்தாளர்
- பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்
- செல்லப்பா பரியாரியார்(சித்த வைத்தியர்)
- வடிவேல் சுவாமிகள்
- மருத்துவர் கந்தையா பாலசுப்ரமணியம்(Dr Bala)
- கலாநிதி சபா ஜெயராஜா அவர்கள்
- வாழ்நாட் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள்
- செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள்
கலைஞர்கள்
- வீரமணி ஐயர் - இசைக், நடனக் கலைஞர்
- வி. தெட்சணாமூர்த்தி - தவில் கலைஞர்
- ஏரம்பு சுப்பையா, பரத நாட்டியக் கலைஞர்
- உ. இராதாகிருஷ்ணன் - வயலின், வாய்ப்பாட்டு
- விஸ்வலிங்கம், தவில்
- வி. உருத்திராபதி - வாய்ப்பட்டு, நாதஸ்வரம், புல்லாங்குழல், ஆர்மோனியம்
- வி. கோதண்டபாணி - நாதஸ்வரம்
- கே. ஆர். சுந்தரமூர்த்தி - நாதஸ்வரம்
- கே. ஆர். புண்ணியமூர்த்தி - தவில்
- இணுவில் சின்னராசா - தவில்
- இணுவில் கணேசன் - தவில்
- க. சண்முகம்பிள்ளை, மிருதங்கக் கலைஞர்
- இணுவையூர் மயூரன் - எழுத்தாளர், வானொலி கலைஞர், கவிஞர்
இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள்
புகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு:
- பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
- இணுவில் காரைக்கால் சிவன் கோவில்
- சிவகாமி அம்மன் கோயில்
- செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்
- இணுவில் கந்தசுவாமி கோயில்
- பரமானந்தவல்லி அம்மன் ஆலயம்(இங்குதான் தவில்மேதை தட்சனாமூர்த்தி அவர்களுக்கு தவில் அரங்கேற்றம் நடைபெற்றது)
- மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
- இணுவில் இளந்தாரி கோயில்
- இணுவில் அண்ணமார் கோயில்
- இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது)
- இணுவில் தெற்கு ஞானலிங்கேஸ்வரர் கோவில்
- இணுவில் வத்துவினி வைரவர் ஆலயம்
- இணுவில் வத்துவினி பிள்ளையார் ஆலயம்
- இணுவில் வத்துவினி கண்ணகா பரமேஸ்வரி ஆலயம்