உடுவில்
உடுவில் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | வலிகாமம் தெற்கு |
உடுவில் (Uduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமம். இது நான்கு புறமும் நெல் வயல்களும், மரக்கறி விளை நிலங்களும் சூழ்ந்துள்ள ஊர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி, மானிப்பாய், சுதுமலை, இணுவில் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி உடுவிலைத் தொட்டுச் செல்லும் காங்கேசன்துறை வீதியும், மருதனார்மடம் சந்தியிலிருந்து, மேற்கு நோக்கி உடுவிலை ஊடறுத்துச் செல்லும் கைதடி - மானிப்பாய் வீதியும் உடுவில் ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களாகும்.
மக்கள்
இங்குள்ள மக்கள் தமிழர்களாவர். பேசும் மொழி தமிழ் மொழி. இங்கு இந்துக்களும், கிறித்தவர்களும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றார்கள். கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகமானாலும் புரட்டஸ்தாந்து மதத்தையும் பிற்காலங்களில் தோன்றிய ஏனைய கிறித்தவ மதப் பிரிவுகளைப் பின்பற்றுபவர்களும் வாழ்கின்றார்கள்.
தொழில்கள்
இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வருகின்றது. ஆயினும் கல்வியறிவு வளர்ச்சியாலும், மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற விளைந்தமையாலும், வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும் தற்போதைய இளம் சந்ததியினர் அரசாங்க மற்றும் தனியார் தொழில்களை பெரும்பாலும் நாடிச் செல்கின்றனர். பலர் புதிய வியாபார, வணிக முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவற்றினை விட பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட சில தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள், சிலர் வேறு தொழில்களை நாடிச் செல்ல மற்றயவர்கள் தம் பரம்பரை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
உடுவிலின் எல்லைகளிலுள்ள கிராமங்கள்
- வடக்கு மற்றும் கிழக்கின் ஒரு பகுதி - சுன்னாகம்
- வடமேற்கு - கந்தரோடை
- மேற்கு - சங்குவேலி
- தென் மேற்கு - மானிப்பாய் மற்றும் சுதுமலை
- தெற்கு - இணுவில்
உடுவில் கிராம சேவையாளர் பிரிவுகள்
உடுவில் கிராமமானது 5 கிராம அலுவலர் பிரிவுகளை [1] கொண்டுள்ளது. அவையாவன
- யா/182 உடுவில் தென் மேற்கு
- யா/183 உடுவில் தென் கிழக்கு
- யா/184 உடுவில் மத்தி
- யா/185 உடுவில் வட மத்தி
- யா/186 உடுவில் வடக்கு
உடுவிலில் அமைந்துள்ள பாடசாலைகள்
- இராமநாதன் மகளிர் கல்லூரி
- யாழ். பலகலைக்கழக இசை, நுண்கலைப்பிரிவு
- உடுவில் மகளிர் கல்லூரி (தரம் 1 முதல் உயர்தரம் வரை) அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட பெண்கள் பாடசாலை. யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்று. பெண்கள் தங்கிப் படிப்பதற்காக அமைக்கப்பட்ட இது, இவ்வகையில் தெற்காசியாவிலேயே முதலாவது எனக் கூறப்படுகின்றது. இதற்கென ஒரு நீண்ட தனி வரலாறும் கல்விப் பாரம்பரியமும் இருக்கின்றது.
- உடுவில் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
- உடுவில் மான்ஸ் தமிழ் கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
- உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம் (தரம் 1-11 வரை)
- உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம் (தரம் 1-11 வரை)
- உடுவில் மல்வத்தை ரோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
- புதுமடம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
உடுவிலில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள்
- உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு இந்து ஆலயம் எனலாம். இது பொதுவாக உடுவில் அம்மன் கோயில் எனவும் அறியப்படுகிறது.
- உடுவில் சிவஞானப் பிள்ளையார் ஆலயம்
- உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் ஆலயம்
- உடுவில் மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயம்
- உடுவில் அம்பலவாணர் வீதி நாகம்மாள் ஆலயம்
- உடுவில் வடக்கு நாச்சியம்மன் ஆலயம்
- உடுவில் காளி அம்பாள் ஆலயம்
- உடுவில் முருகமூர்த்தி ஆலயம்
- உடுவில் பஞ்சமுக பிள்ளையார் ஆலயம்
- உடுவில் ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள் ஆலயம்
- உடுவில் மல்வம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்
- உடுவில் நாகபூசணி அம்மன் கோயில்
உடுவிலில் அமைந்துள்ள கிறித்தவத் தேவாலயங்கள்
இங்கு பல கிறித்தவ தேவாலயங்களும் அமைந்துள்ளன. அவையாவன
- உடுவில் புனித செபமாலை மாதா ஆலயம்
- உடுவில் அமெரிக்க மிஷன் கிறிஸ்தவ தேவாலயம்
- உடுவில் மல்வம் திருக்குடும்ப ஆலயம்
- உடுவில் புதுமடம் கிறிஸ்தவ தேவாலயம்
முக்கியமானவை
- உடுவில் பிரதேச செயலகம்[2]
- வலிகாமம் தெற்கு பிரதேச சபை தலைமைச் செயலகம்
- உடுவில் பொதுசன நூலகம்[3]
- உடுவில் துணை பொதுசன நூலகம் - மருதனார்மடம்
- மருதனார்மடம் வேளாண் சந்தை
- "வாழ்வகம்"-விழிப்புலன் வலுவிழந்தோர் காப்பகம் தனியார் அமைப்பு[4]
- கேன் (CANE) வடக்கு கிழக்கு புற்றுநோய் உதவி - புற்றுநோயளர் காப்பகம் தனியார் அமைப்பு[5]
- அரசினர் ஆரம்ப சுகாதார பராமரிப்புப் பிரிவு (Primary Medical Care Unit)[6]
- The ARK - மன நலம் குன்றிய சிறுவர் காப்பகம்
- ஜசுபி (JACHUFI) பழச்சாறு மற்றும் பான உற்பத்தி தொழிற்சாலை
மேற்கோள்கள்
- ↑ "FIND A GRAMA NILADHARI DETAILS". ICTA. அரசாங்க தகவல் நிலையம். பார்க்கப்பட்ட நாள் 08 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பிரதேச செயலகம்,வலிகாமம் தெற்கு,உடுவில்". Ministry of Public Administration & Home Affairs. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 08 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Main Public Libraries in Sri Lanka". www.sundaytimes.lk. Wijeya Newspapers Ltd. பார்க்கப்பட்ட நாள் 09 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வாழ்வகத்தின் வரலாறு". வாழ்வகம். Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 08 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "CANE Jaffna Hospice". Cancer Aid for North/East(Sri Lanka). Archived from the original on 9 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 08 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "Primary Medical Care Unit Uduvil". Jaffna Regional Directorate of Health Services. Archived from the original on 14 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 08 August 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)