ஆ. வி. மயில்வாகனம்
பேராசிரியர் வித்யா ஜோதி ஆ. வி. மயில்வாகனம் | |
---|---|
பிறப்பு | 13 நவம்பர் 1906 |
இறப்பு | 25 மார்ச்சு 1987 | (அகவை 80)
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு கொழும்பு றோயல் கல்லூரி இலங்கை பல்கலைக்கழக கல்லூரி இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
பணி | கல்வியாளர் |
வித்யா ஜோதி ஆறுமுகம் விஸ்வலிங்கம் மயில்வாகனம், OBE (13 நவம்பர் 1906 – 25 மார்ச் 1987) என்பவர் ஒரு முன்னணி இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
மயில்வாகனம் 1906 நவம்பர் 16 ஆம் நாள் பிறந்தார்.[1][2] இவர் வட இலங்கையில் உள்ள சுதுமலையைச் சேர்ந்த ஆறுமுகம் விசுவலிங்கத்தின் மகன் ஆவார்.[3] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[1][2] இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்த இவர், 1923 இல் இளம் அறிவியலில் முதல் வகுப்பில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1][3] பின்னர் இவர் 1924 இல் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூரியில் சேர்ந்தார், 1928 இல் இயற்கை அறிவியல் டிரிபோசில் முதுகலை சிறப்புப் பட்டம் பெற்று,[1][3] 1938 இல் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2]
மயில்வாகனத்திற்கு கஜானந்தன், நந்தகுமார் என்ற மகன் இருந்தனர்.[3] மயில்வாகனம் பக்திமிக்க இந்து ஆவார்.[4]
பணி
பல்கலைக்கழகத்திற்கு பிறகு மயில்வாகனம் 1932 இல் இயற்பியலில் விரிவுரையாளராக இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்தார். இவர் 1939 இல் இயற்பியல் பேராசிரியரானார் மற்றும் 1948 மற்றும் 1954 க்கு இடையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையின் துறைத்தலைவராக பணியாற்றினார்.[1][2][3] நிக்கோலஸ் ஆட்டிகல துணை வேந்தராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் இவர் துணைவேந்தராக செயல்பட்டார்.[1] இவர் 1966 இல் ஓய்வு பெற்றார்.[3]
1949 ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் மயில்வாகனம் பிரித்தானிய பேரரசின் ஆணை அதிகாரி என்ற கௌரவத்தைப் பெற்றார்.[5] 1985 இல் வித்யா ஜோதி விருதைப் பெற்றார்.[1]
மயில்வாகனம் இலங்கை அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அடிப்படைக் கற்கைகள் நிறுவகத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருந்தார். [1] கொழும்பு பல்கலைக்கழகம் (டிசம்பர் 1980) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றார். [1][6] கொழும்பு பல்கலைக்கழகம் தனது வருடாந்த விருதுகளில் ஒன்றிற்கு மயில்வாகனத்தின் பெயரை சூட்டியுள்ளது.[7]
இறப்பு
மயில்வாகனம் 25 மார்ச் 1987 அன்று இறந்தார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Prof. A. W. Mailvaganam remembered". Daily News (Sri Lanka). 18 November 2005 இம் மூலத்தில் இருந்து 19 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130619211843/http://www.dailynews.lk/2005/11/18/fea05.htm.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Sonnadara, D. U. J.. "Vidyajothi Professor A.W. Mailvaganam". Institute of Physics, Sri Lanka. http://ipsl.byethost11.com/ipsl/ipsl/?page_id=144.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 96–97. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ Siriwardene, P. P. G. L. (22 February 2001). "Mailvaganam and his place in the sphere of education". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304062307/http://www.island.lk/2001/02/22/featur01.html.
- ↑ "Fourth Supplement". The London Gazette (38631): 2835. 3 June 1949. http://www.london-gazette.co.uk/issues/38631/supplements/2835.
- ↑ "Honorary Degrees". கொழும்புப் பல்கலைக்கழகம் இம் மூலத்தில் இருந்து 2013-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130603004450/http://www.cmb.ac.lk/about/honorary-degrees/.
- ↑ "Mailvaganam Memorial Award in Physics (1987)". கொழும்புப் பல்கலைக்கழகம். http://www.cmb.ac.lk/academic/Science/faq/mailvaganam-memorial-award-in-physics-1987.[தொடர்பிழந்த இணைப்பு]