சோ. கிருஷ்ணராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோ. கிருஷ்ணராஜா
KrishnarajaCho.jpg
முழுப்பெயர் சோமசுந்தரம்
கிருஷ்ணராஜா
பிறப்பு 02-02-1947
பிறந்த இடம் உரும்பிராய்,
யாழ்ப்பாணம்
மறைவு 29-05-2009
கொழும்பு,
இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து
எழுத்தாளர்
கல்வி கலாநிதி (மாஸ்கோ
அரசுப்
பல்கலைக்கழகம்)
இளங்கலை
(பேராதனைப்
பல்கலைக்கழகம்)
பணி மெய்யியல்
பேராசிரியர்
பணியகம் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
பெற்றோர் சோமசுந்தரம்,
நல்லம்மா


பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (2 பெப்ரவரி 1947 – 29 மே 2009) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.

வாழ்க்கை குறிப்பு

கிருஷ்ணராஜா யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து பின்னர் மெய்யியல் துறையின் தலைவரானார்.

எழுதிய நூல்கள்

  1. அழகியல் (1996, மறுபதிப்பு 2008),
  2. விமர்சன மெய்யியல், (1989)
  3. விமர்சன முறையியல், (1992)
  4. 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கை, (1994)
  5. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல், (1995)
  6. தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் (1997)
  7. சைவ சித்தாந்தம் மறு பார்வை, (1998)
  8. பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999)
  9. இந்துக் கலைக் கொள்கை ,(2004)
  10. சங்ககாலச் சமூகமும் சமயமெய்யியல் சிந்தனைகளும் (2007)

அவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத பின்வரும் மூன்று நூல்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

  1. மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு
  2. ஐரோப்பிய மெய்யியல் வரலாறு
  3. மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம்

பதிப்பித்த நூல்கள்

  1. தர்க்க பானஹ (1988)
  2. தர்க்க கௌமுதி (1990)
  3. இந்திய மெய்யியல் (கிரியண்ணாவினால் எழுதப்பெற்றது)
  4. சிவஞானபோத வசனாலங்காரதீபம் (2003)

இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்.

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=சோ._கிருஷ்ணராஜா&oldid=2676" இருந்து மீள்விக்கப்பட்டது