சித்தாரா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்தாரா
பிறப்பு30 சூன் 1973 (1973-06-30) (அகவை 51)
கேரளம், கிளிமானூர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–2000
2004–தற்போது வரை
அறியப்படுவதுபுதுப்புது அர்த்தங்கள்
புது வசந்தம்
பெற்றோர்பரமேஸ்வரன் நாயர்
வத்சளா நாயர்

சித்தாரா (பிறப்பு சித்தாரா நாயர் ) என்பவரு ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் கே. பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் படையப்பா, ஹாலுத தவரு, புது வசந்தம் போன்ற பெருவெற்றிபெற்ற படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவர் தொலைக்காட்சியில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார்.[1][2][3]

முப்பது ஆண்டுகளாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்துள்ளார். இவரது சமீபத்திய தெலுங்கு வெற்றிப்படங்களில் ஸ்ரீமந்துடு, சங்கராபரணம், பாலே பலே மகாடுவியா ஆகியவை அடங்கும்.[4]

சித்தரா தமிழகத் திரைத்துறைக்கு கின்னஸ் சாதனையாளர் இசாக் இயக்கிய, நாகேஷ் திரையரங்கம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் மறு பிரவேசம் செய்துள்ளார்.[5][6][7]

ஆரம்ப கால வாழ்க்கை

கேரளத்தின் கிளிமானூரில் பரமேஸ்வரன் நாயர் மற்றும் வல்சலா நாயர் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் மூத்தவராக சித்தாரா பிறந்தார். இவரது தந்தை பரமேஸ்வரன் நாயர் மின்சார வாரியத்தில் பொறியாளராகவும், அவரது தாயார் மின்சார வாரியத்திலும் அதிகாரியாக இருந்தார். இவருக்கு பிரதீஷ் மற்றும் அபிலாஷ் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனர். திருவனந்தபுரத்தின் வட்டப்பாறை, லூர்து மவுண்ட் பள்ளியில் படித்தார். கிளிமனூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யபீடம் கல்லூரியில் முன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தனது முதல் படமான காவேரியில் நடித்தார்.[8]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தமிழ் படங்கள்

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்புகள்
1989 புதுப்புது அர்த்தங்கள் ஜோதி
1990 உன்னைச் சொல்லி குற்றமில்லை ஜனகி
1990 புதுப்புது ராகங்கள் சாரதா
1990 மனைவி வந்த நேரம்
1990 புது வசந்தம் கௌரி
1990 புரியாத புதிர் சிந்து
1990 ஒரு வீடு இரு வாசல் விருந்தினர் தோற்றம்
1991 பாட்டொன்று கேட்டேன் சினேகா
1991 அர்ச்சனா ஐ. ஏ. எஸ். அர்ச்சனா
1991 ஆடி விரதம் சாவித்ரி
1992 காவல் கீதம் பிரியா
1992 என்றும் அன்புடன் நந்தினி
1992 மாதா கோமாதா சாந்தி
1993 மாமியார் வீடு ஆனந்தவள்ளி
1993 பெற்றெடுத்த பிள்ளை கல்யாணி
1994 பொண்டாட்டியே தெய்வம் பரிமளா, சியாமளா
1995 தாய் தங்கை பாசம் கல்யாணி
1998 நட்புக்காக கௌரி
1999 சின்னதுரை மரகதம்
1999 படையப்பா படையப்பாவின் சகோதரி
2000 மனுநீதி பூங்கொடியின் தாய்
2000 முகவரி சாந்தா
2000 திருநெல்வேலி வரதப்பனின் மனைவி
2011 சரித்திரம்
2013 மத்தாப்பூ கார்த்திக்கின் சகோதரி
2013 படம் பேசும் தாமதமாக
2014 பூஜை ராமசாமியின் மனைவி
2017 முன்னோடி சத்யாவின் தாய்
2018 நாகேஷ் திரையரங்கம் நாகேஷின் தாய்

தொலைக்காட்சித் தொடர்கள்

பெயர் அலைவரிசை மொழி குறிப்புகள்
சுவாதி சினுகுலு ஈடிவி நெட்வொர்க் தெலுங்கு பாத்திரம்-துளசி
பராசக்தி வசந்த் தொலைக்காட்சி தமிழ்
கவரி மான்கல் ஜெயா டி.வி. தமிழ் கதாபாத்திரம்-சந்தியா
ஆரத்தி ராஜ் தொலைக்காட்சி தமிழ் பாத்திரம்-ஆரத்தி
சிந்தூரம் ஏஷ்யாநெட் மலையாளம்
ஈத்தரம் மலையாளம்
சினேகா ஏஷ்யாநெட் மலையாளம்
சம்மர் இன் அமெரிக்கா கைரளி தொலைக்காட்சி மலையாளம் பாத்திரம்-மீரா
கங்கா யமுனா சரஸ்வதி ராஜ் தொலைக்காட்சி தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகம்

தனிப்பட்ட வாழ்க்கை

சித்தாரா தன் வாழ்வின் துவக்கதில் எடுத்த முடிவின்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.[9]

குறிப்புகள்

  1. "Sithara back to movies". www.filmibeat.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Y. SUNITA CHOWDHARY. "The evergreen star". The Hindu. Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  3. "Malayalam Movie Actress Sithara - Nettv4u". nettv4u.
  4. "Complete List Of Sithara Movies - Actress Sithara Filmography". spicyonion.com.
  5. "தியேட்டரில் நடக்கும் கதைதான் 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படம்". Tamil Cinetalk. 14 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  6. "கின்னஸ் சாதனையாளர் இயக்கும் 'நாகேஷ் திரையரங்கம்'". Chennai Online. 14 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  7. Subramanian, Anupama (27 October 2016). "Veteran Latha returns as a tribal woman". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
  8. "ഞാൻ പ്രണയിച്ചിരുന്നു. പക്ഷേ..." manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
  9. "Actress Sithara reveals why she decided not to get married". OnManorama (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.

வெளி இணைப்புகள்

  • Sithara on IMDb
"https://tamilar.wiki/index.php?title=சித்தாரா_(நடிகை)&oldid=22734" இருந்து மீள்விக்கப்பட்டது