மத்தாப்பூ (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மத்தாப்பூ
இயக்கம்நாகராஜ்
தயாரிப்புஎஸ். சுடலைகண்ராஜா
கதைநாகராஜ்
இசைவேலாயுதம்
சபேஷ் முரளி (பின்னணி)
நடிப்புஜெயன்
காயத்ரி
ஒளிப்பதிவுசி. ஆர். மாறவர்மன்
படத்தொகுப்புஜி. கே. மகேஷ்
கலையகம்விநாயக புரொடக்சன்ஸ்
வெளியீடு13 செப்டம்பர் 2013 (2013-09-13)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மத்தாப்பூ (Mathapoo) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். நாகராஜ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெயன் மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை நாகராஜ் இயக்கியுள்ளார், இதற்கு முன்பு தினம்தோரம் (1998) படத்தை இயக்கியவர். மின்னலே (2001) மற்றும் காக்க காக்க (2003) ஆகிய படங்களுக்கான உரையாடலை எழுதினார்.[1][2] துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் பட்டம் பெற்ற ஜெயன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[1] 18 வயசு மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி முக்கிய பெண் பாத்திரத்தில் நடிக்க ஒப்பதமானார்.[3] இப்படத்தின் இசை அமைப்பாளராக வேலாயுதம் நியமிக்கபட்டார். இவர் எம். எஸ். விஸ்வநாதனின் ஆசிரியரான வீரராகவனிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்.[1] இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தனர்.[4] நடிகர்களும் படக் குழுவினரும் எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர். படம் அறுபது நாட்களில் படமாக்கப்பட்டது.[2]

இசை

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேலாயுதத்தால் இசையமைக்கபட்டன.[1] முதலில் 2012 திசம்பரில் இசை வெளியிட இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 24 ஏப்ரல் 2013 அன்று வெளியிடப்பட்டது.[2] இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், எஸ். பி. ஜனநாதன், பாலசேகரன், அழகம்பெருமாள், பாண்டிராஜ், சுசீந்திரன், சசி, களஞ்சியம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.[3]

பாடல் தலைப்பு பாடலாசிரியர் பாடகர் (கள்)
"அட்டா இதயம் பறக்கிறதே" அரிவழகன் ஹரிஷ் ராகவேந்திரா
"அவாரம்பூ ஒண்ணு" ஜே. பிரான்சிஸ் கிருபா கார்த்திக்
"சுட சுட ஓடும் காற்று" நா. முத்துக்குமார் பிரசன்னா
"உன்பர்வை வெளிச்சத்திலே" ஹரிஷ் ராகவேந்திரா
"யாரிடமும் சொல்லாதே" சின்மயி
"நில் நிலவே" கார்த்திக்

வெளியீடு

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைக் கொடுத்து, "இந்த நீண்ட திரைப்படத்தை சற்று தாங்கக்கூடியதாக உள்ளவை துணை கதாபாத்திரங்கள் தான். அவைதான் நம்மை கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கின்றன".[5] பிஹைண்ட்வுட்ஸ் ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரையை கொடுத்தது. மேலும் "மிக மெதுவான நாடகப் படமான இது ஒரு தொலைக்காட்சி 'மெகா-தொடரை' போன்று உள்ளது" என்று எழுதியது.[4]

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 Kumar, S. R. Ashok (4 May 2013). "Audio Beat: Sparkling notes". The Hindu.
  2. 2.0 2.1 2.2 Manigandan, K. R. (24 November 2012). "Lights, camera, action, once again". The Hindu.
  3. 3.0 3.1 "This director is back after a 12 years break, Nagaraj, Mathappu". www.behindwoods.com.
  4. 4.0 4.1 "Mathapoo Movie Review Mathapoo, Jayan, Gayathri". www.behindwoods.com.
  5. "Mathapoo Movie Review {2.0/5}". The Times of India. 10 May 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/mathapoo/movie-review/22617362.cms. பார்த்த நாள்: 18 August 2020. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மத்தாப்பூ_(திரைப்படம்)&oldid=36196" இருந்து மீள்விக்கப்பட்டது