சிட்டிசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிட்டிசன்
இயக்கம்சரவண சுப்பையா
தயாரிப்புஎஸ். எஸ். சக்கரவர்த்தி
கதைசுஜாதா
வசனம்பாலகுமாரன்
இசைதேவா
நடிப்புஅஜித் குமார்
வசுந்தர தாஸ்
மீனா
நக்மா
மணிவண்ணன்
வெளியீடு2001
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20 கோடி
($ 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)

சிட்டிசன் 2001 ஆம் ஆண்டில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் தேவா உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

திரைக்கதை

ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் (அஜித்) என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (நக்மா) இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.

நடிப்பு

நடிகர் மற்றும் நடிகர்கள் கதாபத்திரம்
அஜித் அறிவானந்தம், அப்துல்லா, அந்தோனி, சிட்டிசன் மற்றும் சுப்ரமணி
வசுந்தர தாஸ் இந்து
மீனா ஜெவிலி
நக்மா CBI சரோஜி அரிச்சந்திரன்
பாண்டியன் 'வாப்பா'
'நிழல்கள்' ரவி கலெக்டர் சந்தானம்
தேவன் DGP தேவசகாயம்
அஜய் ரத்னம் ACP கிருஷ்ண மூர்த்தி
கொச்சி ஹனிபா மன்மதக் குட்டி
ஷர்மிளா ஃபாத்திமா

பாடல்கள்

சிட்டிசன்
இசையமைப்பாளர்
வெளியீடு2001
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்தேவா

தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. பாடகர் திப்பு பாடிய மேற்கே உதிக்கும் சூரியனே எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும். அனைத்து பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து. "ஐ லைக் யூ" என்ற பாடல் ஐ பீல் லோன்லி என்ற பாடலை ஒத்திருந்தது. "பூக்காரா" என்னும் பாட்டு டேக் எ சேன்ஸ் ஆன் மீ என்னும் பாடலில் சாயலில் இருந்தது.[1]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆஸ்திரேலிய தேசம் "  ஹரிஹரன், ஹரிணி 6:46
2. "மேற்கே உதிக்கும் சூரியனே"  திப்பு 6:12
3. "பூக்காரா பூக்காரா"  சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ் 6:20
4. "சிக்கிமுக்கி கல்லு"  சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், 6:51
5. "ஐ லைக் யூ"  வசுந்தரா தாஸ் 6:52

மேற்கோள்கள்

  1. Paneerselvam Umamaheswaran; Shravan Ramachandran; Shivadas D S (2020). "Retrospective Analysis of Plagiaristic Practices within a Cinematic Industry in India – a Tip in the Ocean of Icebergs". Journal of Academic Ethics 18 (2): 143–153. doi:10.1007/s10805-020-09360-7. 
"https://tamilar.wiki/index.php?title=சிட்டிசன்&oldid=33248" இருந்து மீள்விக்கப்பட்டது