கோபம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலின் நோரட்ரினலின் அதிகம் சுரக்கலாம். யூ.ஸி. இர்வின்னை சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து இது சம்மந்தமாக மிகுதியான இலக்கியங்களை அளித்து உள்ளார், அவர் கோபத்தை மூன்று விதமாக வகைப்படுத்தி உள்ளார்: அறிவை பாதிக்க கூடியது, உடலை பாதிக்ககூடியது, நடத்தையை பாதிக்கக்கூடியது. வில்லியம் டிஃபூர் எனும் கோப மேலாண்மை எழுத்தாளர், கோபத்தை உயர் அழுத்த சமையல் பாத்திரம் அதாவது அழுத்தச் சமையற்கலனுடன் (பிரஷர் குக்கர்) ஒப்பிடுகிறார்: நமது கோபத்தின் மீது நாம் அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் அது வெடிக்கும் வரையே.

கோபம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு உணர்ச்சியாக நம் அறிவிலும், உடலிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. ஒரு மனிதன் தன்னை அச்சுறுத்தும் வேறு ஒரு வெளி சக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவே மூளையின் தேர்வான கோபம். கோபத்தின் வெளிப்பாடுகளை முக பாவனைகள், உடல் மொழி, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் கண்டறியலாம். மனிதர்களோ, மிருகங்களோ கோபத்தின் வெளிப்பாடுகளாக மிகுந்த சப்தம் எழுப்புவது, உடலை பெரிதாக்க முயற்சிப்பது, பற்களை காட்டுவது, முறைப்பது முதலியவற்றை தங்கள் எதிரிகளின் அச்சுறுத்தலை நிறுத்த தரும் ஒரு எச்சரிக்கையாகும்.

நவீன உளவியலாளர்கள் கோபம் என்பது முதன்மையான, இயற்கையான, முதிர்ந்ததான, அனைத்து மனிதனுக்கும் ஏற்படும் தொடர்ந்து வாழ்தலுக்கான் ஒரு அனுபவமாக கருதப்படுகிறது. கோபம் ஒரு மனிதனின் நடவடிக்கையை திருத்த உளவியல் வளங்களை திரட்டும்; ஆனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனின் தனிப்பட்ட அல்லது சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பல ஞானிகள் கோபத்தின் விளைவுகளை பற்றி எச்சரித்தாலும் கோபத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது பல வேற்றுமைகள் இருந்த வண்ணமே உள்ளது. கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகளை வழங்கிய ஞானிகள் அதனால் எற்படும் தீய விளைவுகளையும் எடுத்து கூறியுள்ளனர்.

சினம் குறித்து அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள்

சங்க இலக்கியத்தில் கதம், சீற்றம், சினம், வெகுளி முதலிய சொற்கள் கோபத்தை உணர்த்தும் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.-[1]

  • சினம் = கோபம், நெருப்பு, போர்
  • சினத்தல் = புண் வீங்கிச் சிவத்தல்
  • சினப்பு = புண் போன்ற வீக்கம், வேனற்கட்டி
  • சினப்புண் = அழல்விரணம்

உளவியலும், சமூகவியலும்

உளவியலாளர்கள் மூன்று வகையான கோபத்தை கண்டறிந்துள்ளனர்; அதில் முதல் வடிவமான பதற்றத்துடன் கூடிய திடீர் கோபம் என்பதை ஜோசப் பட்லர் எனும் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில பாதிரியால் கண்டறியப்பட்டது. இது சுயப்பாதுகாப்பின் போது வெளிபடும். இரண்டாம் வடிவம் அமைதியான உள்நோக்கத்துடன் கூடியதாகும் இது ஒருவர் தன்னை நியாயமில்லாத வகையில் நடத்தும் போது உணரப்படும். இவை இரண்டும் வந்து செல்பவை மூன்றாவது வடிவ கோபம் தங்கள் இயற்கையான மனநிலையுடன் ஒன்றிபோவது எப்போதும் எரிச்சல் அல்லது கடுகடுப்பாக இருப்பது இந்த வகையின் வெளிப்பாடாகும்.

கோபம் உளவியல் வளங்களை திரட்ட, தவறான நடத்தைகளை திருத்தும் உறுதியை ஊக்குவிக்க, சமூக நீதியை உயர்த்த, எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய, நம்மை பொறுமையாக இருக்க வைக்க உதவக் கூடியது. ஆனால் அதுவே சரியான வடிகால் இல்லாவிடில் அழிவைத் தர கூடியது. கோபம் தன் வலிமையான வடிவத்தில் மனிதனின் தகவல் செயல்ப்பாட்டுத் திறன், அறிவாற்றல், நடத்தை கட்டுப்பாடு முதலியவற்றை முடக்கக்கூடியது. மேலும் ஒரு கோபமான மனிதன் புற உண்மை, பச்சாத்தாபம், விவேகம் அல்லது சிந்தனையை இழந்து மற்றவர்க்கு தீங்கு விளைவிக்கலாம்.

காரணங்கள்

மனிதர்கள், தங்களை சார்ந்தவர்கள்/சார்ந்தவை அவமதிக்கபட்டாலோ, தாக்கப்பட்டலோ கோபமடைகின்றனர். உதாரணத்திற்கு ஒருவருடைய ஒரு சிற்றுந்து (கார்) சேதமடைந்து விட்டதென்றால், அந்த சேதத்திற்கு காரணம் வேறொருவர் என்பதை அறிந்தால் கோபமடைவார். அதுவே அவ்வண்டி இயற்கை சூழ்நிலையால் சேதமடைந்து விட்டதென்றால் வருத்தமடைவார். அல்லது தன்னால் அவ்வண்டி சேதப்படுத்தபட்டிருந்தால் அவர் வருத்தமடைவார். ஒருவர் தான் விரும்பியதை அடையாவிடில் கோபம் அடைவர். கோபத்தை அனுபவித்த ஒருவர் அது தனக்கு ஏற்பட்ட விடயங்களை கொண்டே கோபம் அடைகிறார். இவ்வாறான கருத்துக்கள், வெளிக்காரணங்களே தம் கோபத்திற்கு காரணம் என்னும் மாயையை உருவாக்குகிறது. இக்கருத்துக்கள் கோபமுற்றவரின் அனுபவமான சுய கண்காணிப்பு, இழப்பு, கவனமின்மை முதலியவற்றை அடிப்படையாக கொண்டே கணிக்கப்படுகிறது. கோபம் பல காரணங்களை ஒன்றாகச் சேர்ந்து தனிமையாக தோன்றுகின்றன. ஆனால் மக்களுக்கு தங்கள் கோபத்திற்கான காரணம் ஒன்றே எனும் முடிவுக்கு வருகிறார்கள்.

கோபம் ஒருவரை அதிக நம்பிக்கைக்கு உள்ளாக்குகிறது. ஆபத்துக்கள் சிறியதாக தோன்றும், தாம் செய்யும் எதுவும் அபாயகரமானது அல்ல என்னும் எண்ணம் தோன்றும். கோபமானவர்கள் தங்களுக்கு கோபம் உண்டாக்கும் செயலை எதிர்பார்த்தே இருப்பர். அவர்கள் தங்கள் நிலையின் உண்மையறியாது அடுத்தவர் மீது பழிச் சுமத்துவதையே நாடி இருப்பர். அவர்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து தெரிவிப்பின் அது அவர்களை மேலும் கோபம் அடையச் செய்யும். கோபம், ஒருவரை சமூகத்தில் உயர்ந்தவனாக காட்டவும், பேரம் பேசுவதில் சிறந்தவனாக காட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு ஆய்வில் மக்கள், மகிழ்ச்சியான ஆசாமியை விட கோபமான ஆசாமிக்கே அதிகம் வளைந்து கொடுக்கின்றனர் என தெரிவிக்கிறது.

கோபத்தை சமாளிக்கும் உத்திகள்

கோபம், ஒவ்வொரு முறையும் ஒரு தேர்வு செய்ய நம் மூளையை கோருகின்றது. ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் போது வன்முறையை தவிர்க்க அவ்விடத்தினை விட்டு நீங்க வேண்டும். வேறு வழிகளாக ஆத்திரத்தை அடக்க முயற்சி செய்து நிலைமையை சுமூகப்படுத்த முற்படலாம். நொவோகோவின் கருத்தின்படி ஒருவன் தம் கோபத்திற்கான காரணத்தை ஆராய வேண்டும். பின்னர் அவன் தன் கடந்த கால கோபமான அனுபவங்களில் இருந்து தளர வேண்டும். அல்லது நவீன உளவியல் மருத்துவம் காட்டும் பயிற்சியின் மூலம் கோபத்தை குறைக்கலாம். நவீன பயிற்சிகள் அறிபுல நடத்தைச் சிகிச்சை (சி.பி.டி.; cognitive behavioural therapy), அறிவுசார் உணர்வெழுச்சி நடத்தைச் சிகிச்சை (ஆர்.ஈ.பி.டி; Rational emotive behaviour therapy) முதலியவை ஆகும். இப்பயிற்சிகளை தேர்ந்த ஒருவரிடம் கற்று கொள்வதன் மூலம் கோபத்தை வெகுவாக குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பயிற்சியின் பின்னர் உளைச்சல் தடுப்பு (stess inoculation) எனும் பயிற்சியின் மூலம் கோபத்தை தவிர்க்கும் வழிமுறைகளை அறியலாம்.

அறிபுல நடத்தைச் சிகிச்சை

இது எப்ரம் ஃபெர்னான்டஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பயிற்சி அறிவாற்றல் மற்றும் நடத்தை சார்ந்த வழிமுறைகளை கொண்டு மனதை சாந்தமாக்குவதுடன், கோபத்தை கையாளும் வழிமுறைகளை நமக்கு புலப்படுத்தும். இப்பயிற்சி மூன்று விதமான முறையில் கோபத்தை கையாளுகிறது: தடுத்தல், தலையிடுதல், பயிற்சிக்கு பின்னர் இதன் மூலம் ஒருவர் கோபம் வருவதை தடுக்கலாம், வந்தாலும் எளிதில் கையாளலாம்.

மேற்கோள்கள்

  1. Videbeck, Sheila L. (2006). Psychiatric Mental Health Nursing (3rd ed.). Lippincott Williams & Wilkins.
  2. Novaco, Raymond (1986). "Anger as a clinical and social problem.". Advances in the study of aggression (New York: Academic Press.) 2.
  3. DeFoore, William (1991). Anger : Deal with It, Heal with It, Stop It from Killing You (1st ed.). Health Communications, Inc.
  4. "Anger definition". பரணிடப்பட்டது 2014-01-23 at the வந்தவழி இயந்திரம் Medicine.net. Retrieved 2008-04-05.
  5. Harris, W., Schoenfeld, C. D., Gwynne, P. W., Weissler, A. M.,Circulatory and humoral responses to fear and anger, The Physiologist, 1964, 7, 155.
  6. Raymond DiGiuseppe, Raymond Chip Tafrate, Understanding Anger Disorders, Oxford University Press, 2006, pp. 133–159.
  7. Anger,The American Heritage Dictionary of the English Language, Fourth Edition, 2000, Houghton Mifflin Company.
  8. Michael Kent, Anger, The Oxford Dictionary of Sports Science & Medicine, Oxford University Press, ISBN 0-19-262845-3
  9. Primate Ethology, 1967, Desmond Morris (Ed.). Weidenfeld & Nicolson Publishers: London, p. 55
  10. Raymond W. Novaco, Anger, Encyclopedia of Psychology, Oxford University Press, 2000
  11. John W. Fiero, Anger, Ethics, Revised Edition, Vol 1
  12. Simon Kemp, K.T. Strongman, Anger theory and management: A historical analysis, The American Journal of Psychology, Vol. 108, No. 3. (Autumn, 1995), pp. 397–417
  13. Sutton, R. I. Maintaining norms about expressed emotions: The case of bill collectors, Administrative Science Quarterly, 1991, 36:245–268
  14. Hochschild, AR, The managed heart: Commercialization of human feeling, University of California Press, 1983

Paul M. Hughes, Anger, Encyclopedia of Ethics, Vol I, Second Edition, Rutledge Press.

  1. David DeSteno, Nilanjana Dasgupta, Monica Y. Bartlett, and Aida Cajdric (2004). "Prejudice From Thin Air: The Effect of Emotion on Automatic Intergroup Attitudes" பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம். Psychological
  2. Tiedens LZ, Anger and advancement versus sadness and subjugation: the effect of negative emotion expressions on social status conferral, Link: [1], Journal of Personality & Social Psychology, 2001 Jan; 80(1):86–94.
  3. Tiedens, Ellsworth & Mesquita, Sentimental Stereotypes: Emotional Expectations for High-and Low-Status Group Members, 2000
  4. Leland R. Beaumont, Emotional Competency, Anger, An Urgent Plea for Justice and Action, Entry describing paths of anger
  5. Toward an Integrative Psychotherapy for Maladaptive Anger," International Handbook of Anger.

இணையான சொற்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோபம்&oldid=13791" இருந்து மீள்விக்கப்பட்டது