அறிதிறன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உணர்வு நிலையின் பிரதிநிதித்துவம், ஆங்கிலேய பாராசெல்சிய மருத்துவர் இராபர்ட் ஃப்லூட்டின் 17ம் நூற்றாண்டு ஒவியம்

அறிதிறன் (cognition) என்னும் சொல், மனிதர்களைப் போல, தகவல்களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ செயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான மனம், தர்க்க அறிவு(ஏரணம்), நோக்கு (perception), நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க

மேலும் வாசிக்க

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=அறிதிறன்&oldid=13750" இருந்து மீள்விக்கப்பட்டது