அலட்சியம்
Jump to navigation
Jump to search
அலட்சியம் (carelessness or negligence) என்பது தொடரும் பல நிகழ்வுகளினை அறிந்திருப்பினும் அவற்றைப்பற்றி சற்றும் கவலைப்படாத உணர்வு. இது பல முறை ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். ஒரு சாமான்யமான நபர் செய்வதனை செய்யத் தவறுவதை அலட்சியப்போக்கு என்பர்[1]
ஜே. எம். ஃபெயின்மேன் (Jay M. Feinman) என்பவர் ரட்ஜர்ஸ் சட்டப் பல்கலைக் கழதத்தில், மக்கள் தான் செய்யும் செயல்களினால் மற்றவர்கட்கு தீங்கு விளையும் என்றறிந்து அதற்கு ஏற்றாற் போல் எவ்வித தீங்குமின்றி தன் பணிகளைச் செவ்வனே செய்யாதது அலட்சியம் என்கிறார்[2].
நன்மைகள்
தேவையான விசயங்களில் அலட்சியம் காட்டுதல் அவசியம். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- நடந்தால் விழுந்து அடிபடும் என்ற பொதுவான நோக்கினை அலட்சியப்படுத்தும் குழந்தையே எளிதில் நடை பயில்கிறது.
- பின்வரும் அபாயத்தை கணக்கிட்டு (calculated risk) பின் ஆபத்தை அலட்சியப்படுத்தினால் பல சாதனைகளை நிகழ்த்துகின்றனர்
- திக்குவாய் அல்லது மாற்றுத்திறன் உள்ளோர் தங்களின் குறையை அலட்சியப்படுத்தி நிறைகளில் கவனம் செலுத்தி சாதிக்கலாம்
- வாழ்வில் முன்னேற பல நேரங்களில் பல்வேறுபட்ட மற்றவர் எண்ணங்களிலிருந்து தெரிவிக்கும் விமர்சனங்களை அலட்சியப்படுத்தல் வேண்டும்
தீமைகள்
அலட்சியம் பொதுவாக கவனக்குறைவினை தூண்டுமாதலால் பல தீமைகளையும் பயக்கும். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அலட்சியத்தோடு பணி புரிவோர் வேலை பார்க்குமிடங்களில் விபத்துக்கு ஆளாகின்றனர், அல்லது மற்றவர்களை ஆளாக்குகின்றனர்
- தெருவில் அலட்சியத்தோடு வாகனம் ஓட்டுபவரால் பல சாலை விபத்துகள் நடப்பதைக் காணலாம்
- அலட்சியத்துடனும் முன்னறிவின்றியும் பொருட்களையோ விலங்குகளையோ கையாளுவோர் மரணத்தையும் சந்திக்க நேருகிறது
உசாத்துணை
- ↑ "Negligence". Encyclopædia Britannica (Meriam Webster). http://www.merriam-webster.com/dictionary/negligence. பார்த்த நாள்: 2011-12-06.
- ↑ Feinman, Jay (2010). Law 101. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-539513-6. https://archive.org/details/law1010000fein.