குருச்சேத்திரம் (2006 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குருச்சேத்திரம்
இயக்கம்ஜெயபாரதி
தயாரிப்புகே. எம். இராஜேந்திரா
கதைஜெயபாரதி
இசைஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி
நடிப்புசத்யராஜ்
ரோஜா
வடிவேலு
கே. எம். இராஜேந்திரா
ஒளிப்பதிவுஏ. கருப்பையா
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்இராஜேந்திரா மூவிஸ்
வெளியீடு11 ஆகத்து 2006
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குருச்சேத்திரம் (Kurukshetram) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கிய இப்படத்தில் சத்யராஜ், ரோஜா, வடிவேலு கே. எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி அமைத்துள்ளார். ராஜேந்திர மூவிஸ் என்ற பதாகையின் கீழ் இப்படத்தை கே. எம். ராஜேந்திரா தயாரித்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்றவற்றை முறையே ஏ. கருப்பயா, சுரேஷ் அர்ஸ் ஆகியோர் மேற்கொண்டனர். குருசேத்திரம் சத்யராஜின் 170 வது படம். படமானது 2006 ஆகத்து 11 அன்று வெளியிடப்பட்டது.

கதை

பரத் ( சத்யராஜ் ), அவரது மனைவி வைஷ்ணவி ( ரோஜா ) ஆகியோர் மேற்கு அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளான சுபாஷ், சிந்து ஆகியோருடன் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரத்தும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் பகுதியில் கலவரம் வெடிக்கிறது, அந்த சமயத்தில் அவர்களின் மகள் சிந்து குண்டு வெடிப்பில் இறந்துவிடுகிறாள். சிந்து இறந்த பிறகு, வைஷ்ணவியின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே பரத் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு இடம்பெயர முடிவு செய்கிறார். சென்னைக்குச் சென்ற பிறகு, பரத்தின் நண்பர் ஜாக் (கே. எம். ராஜேந்திரா) வைஷ்ணவியை மிரட்டி பரத்தின் குடும்பத்தை சித்திரவதை செய்வதால் பரத்தும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் வாழமுடியாமல் போகிறது. ஜாக் வைஷ்ணவியை ஏன் அச்சுறுத்துகிறார் என்பதை படத்தில் முன்நடந்ந்த காட்சிகள் காட்டுகின்றன.

நடிகர்கள்

நகைச்சுவை

இப்படத்தின் நகைச்சுவை பகுதியில் ஊத்தப்பம் எப்படி ஊற்றுவது என்பது குறித்து வடிவேலு அறிவுறுத்தியது பட வெளியீட்டின்போது வைரல் ஆனது.[1]

மேற்கோள்கள்