கும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில் நுழைவாயில்

அமைவிடம்

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோயில்களில் இக்கோயில் ஒன்றாகும். பிரம்மன் கோயில் எனப்படும் வேதநாராயணப் பெருமாள் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர், தாயார்

இக்கோயிலில் மூலவர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். மூலவருக்கு முன்பாக பலிபீடமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் உள்ளார். அருகில் பெருந்தேவி தாயார் சன்னதி உள்ளது.

பிற சன்னதிகள்

இக்கோயிலில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகன், தாததேசிகன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இத்துடன் ஸ்ரீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, விஷ்வஸேனர் சன்னதியும் உள்ளன.

குடமுழுக்கு

இக்கோயிலில் 09.02.1988-இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.

அருகிலுள்ள கோயில்கள்

இக்கோயிலின் அருகில் மும்மூர்த்தி விநாயகர் கோயில் மற்றும் பிரம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.

மேற்கோள்கள்