கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயில்
Jump to navigation
Jump to search
கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் பகவத் விநாயகர் கோயிலுக்கு சற்று முன்பாக படைவெட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில், யானையடி அய்யனார் கோயில், ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில், பகவத் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.
மூலவர்
இக்கோயிலின் மூலவராக படைவெட்டி மாரியம்மன் உள்ளார். இக்கோயிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி உள்ளது. அதை அடுத்து பேச்சியம்மன் சன்னதி உள்ளது திருச்சுற்றின் வடபகுதியில் பச்சை காளியம்மன் சன்னதி காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ புலவர் சி.இளங்கோவன், மகாமகமா வாருங்கள், வாருங்கள், மகாமகம் 1992 சிறப்பு மலர்