கும்பகோணம் இலுப்பையடி விநாயகர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலுப்பையடி விநாயகர் கோயில்

கும்பகோணம் இலுப்பையடி விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும்.

மூலவர்

மூலவராக விநாயகர் உள்ளார். அவர் இலுப்பையடி விநாயகர் எனப்படுகிறார். ஹாஜியர் தெரு அருகேயுள்ள கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயில் கருவறை, சிறிய விமானங்களைக் கொண்டுள்ளது.

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது. [1]

பிற விநாயகர் கோயில்கள்

எலந்த மர விநாயகர் கோயில்
அரச மர விநாயகர் கோயில்

இலுப்பையடி விநாயகர் கோயில் போல கும்பகோணத்தில் எலந்தமர விநாயகர் கோயில், அரச மர விநாயகர் கோயில்கள் உள்ளன. இவ்விரு கோயில்களும் காசி விசுவநாதர் சன்னதியின் கீழ வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில்களின் குடமுழுக்கு நவம்பர் 2015இல் நடைபெற்றது. [2]

கும்பகோணம் எலந்த மர விநாயர் கோயில்

எலந்த மர விநாயகர் கோயிலில் விநாயகர் மூலவராக உள்ளார்.

கும்பகோணம் அரச மர விநாயகர் கோயில்

அரச மர விநாயகர் கோயிலில் விநாயகர் மூலவராக உள்ளார். விநாயகருக்கு முன்பாக சுவாம்நாதசுவாமி, அய்யப்பன் ஆகியோர் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்