கும்பகோணம் பேட்டைத்தெரு சக்கராயி அம்மன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நுழைவாயில்

கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இருப்பிடம்

கும்பகோணம் நகரில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பேட்டைக்கடைத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்

கருவறையில் சக்கராயி அம்மன் உள்ளார். கருவறையின் வெளியே வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகன் உள்ளனர். அருகே பதினெட்டாம்படியான், மதுரை வீரன் உள்ளனர்.

கும்பாபிஷேகம்

இக்கோயில் 13.7.1987இல் கும்பாபிஷேகம் ஆனதாகக் கல்வெட்டுக்குறிப்பு உள்ளது.

தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்

தாராசுரம் வட்டம் எலுமிச்சங்காபாளையத்தில் கீழப்பாக்கம் பகுதியில் ஒரு சக்கராயி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்