இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்
Jump to navigation
Jump to search
இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் எனப்படுபவை இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கிபி 1648 ஆம் ஆண்டிற்கும் கிபி 1894 ம் ஆண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் தோன்றின.[1]
பெருங் காப்பியங்கள்
- கனகாபிடேக மாலை - கனக கவிராயர் - 1648
- சீறாப்புராணம் - உமறுப் புலவர் - 1703
- திருமணக் காட்சி - சேகாதி நயினார் - 1710
- சின்னச் சீறா - பனீ அகமது மரைக்காயர் - 1732
- இராச நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1807
- குத்பு நாயகம் - சேகனாப் புலவர் - 1810
- திருக்காரணப் புராணம் - சேகனாப் புலவர் - 1812
- குத்பு நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1814
- முகைதீன் புராணம் - பதுறுத்தீன் புலவர் - 1816
- திருமணி மாலை - சேகனாப் புலவர் - 1816
- இறவுசுல் கூல் படைப்போர் - குஞ்சுமூசு லெப்பை - 1818
- புதூகுசா அம் - சேகனாப் புலவர் - 1821
- தீன் விளக்கம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1821
- நவமணி மாலை - ஐதுறூசு நயினார்ப் புலவர் - 1855
- நாகூர்ப் புராணம் - குலாம் காதிறு நாவலர் - 1882
- ஆரிபு நாயகம்
சிறு காப்பியங்கள்
- மிகுராசு மாலை - ஆலிம்புலவர்
- பொன்னரிய மாலை - மின்னா நுருத்தீன் புலவர்
- சாதுலி நாயகம் - முகம்மது முகியித்தீன் லெப்பை
- மூசாநபி புராணம் - முகம்மது நூருத்தீன்
- அபூ கமா மாலை - செய்தக்காதிப் புலவர்
- இராசமணி மாலை - பக்கீர் மதாறு புலவர்
- செய்யிதத்துப் படைப்போர் - குஞ்சுமூசுப் புலவர்
- யூசுபு நபி கிசா - மதாறு சாகிப் புலவர்
- சைத்தூன் கிசா - அப்துல் காதர் சாகிபு
தற்காலக் காப்பியங்கள்
- யூசுப் சுலைகா காப்பியம்
- காதல் யாத்திரை (லைலா - மஜ்னூன்) (குறுங் காப்பியம்)
- பிரளயம் கண்ட பிதா (குறுங் காப்பியம்)
மேற்கோள்கள்
- ↑ மு. சாயபு மரைக்காயர். தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம். http://export.writer.zoho.com/public/emsabai/aug10-article6/fullpage[தொடர்பிழந்த இணைப்பு]
உசாத்துணைகள்
- வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.