மதராஸி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvakumar mallar பயனரால் செய்யப்பட்ட 13:57, 18 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மதராஸி
இரண்டாவது பார்வை பதாகை
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஎன். சிறீலட்சுமி பிரசாத்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுசுதீப் எலமோன்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்சிறீ இலட்சுமி மூவிசு
வெளியீடு5 செப்டம்பர் 2025 (2025-09-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு200 கோடி[1]

மதராஸி என்பது ஓர் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால், ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்துவருகின்றனர். இத்திரைப்படம் செப்டம்பர் 2023இல் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 2025இல் இருந்து படபிடிப்பு நடத்துவந்தது. இத்திரைப்படம் 5 செப்டம்பர் 2025இல் வெளியானது.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

2020இல் தர்பார் திரைப்படத்தை இயக்கிய பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தமிழில் முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இடையில் சிக்கந்தர் என்னும் இந்தி படம் இவரது இயக்கதில் 2025இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றியடைவில்லை.[5] மதராஸி படத்தின் பெயர் காரணத்தைப் பற்றி கூறும் பொழுது "தென் இந்தியர்களை வட இந்தியர்கள் 'மதராஸி' என்ற வார்த்தையை வைத்துத்தான் அடையாளப்படுத்துவார்கள். தற்போது அந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது குறைந்துவிட்டது. இந்தப் படம் வட இந்தியர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியதுதான். அதனால் இந்தத் தலைப்பு சரியானதாக இருந்தது" என்று ஒரு பேட்டியில் முருகதாஸ் குறிப்பிட்டார்.[6] இப்படத்தின் முன்னோட்டம் 24 ஆகத்து 2025ஆம் நாள் வெளியானது.[7]

வெளியீடு

திரையரங்குள்

மதராஸி திரையரங்குளில் 5 செப்டம்பர் 2025இல் வெளியானது.[8] தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியில் தில் மதராஸி என்று பெயரிடப்பட்டுள்ளதது.[9]

வீட்டு ஊடகம்

இணையன உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோவும் செயற்கைக்கோள் உரிமத்தை ஜீ தொலைக்காட்சியும் வாங்கியுள்ளதாக செய்தி வந்தது.[10]

விமர்சனங்கள்

தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "மதராஸி - துப்பாக்கி பின்னணியிலான கதை... ஆனா, துப்பாக்கி மாதிரி இல்லை!" என்று எழுதி மதிப்பீடுகள் வழங்கினர்.[11] தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "சமூக பேரழிவுகளை தொடர்ந்து படங்களில் முன்னிறுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த முறை துப்பாக்கி கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். பரபரப்பான திருப்பம் திருப்பம் நிறைந்த காட்சிகளாய் படத்தை இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்" என்று எழுதினர்.[12]

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "லாஜிக் மீறல்களும், மேலோட்டமான சில எமோஷன் காட்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், அவற்றைத் தாண்டி ஆக்ஷன் - காதல் எனும் பரபர சாலையில், விறுவிறுப்போடு கடைசி வரை ஓடி கமெர்சியல் திருப்தியைத் தருகிறது இந்த 'மதராஸி'" என்று எழுதினர்.[13] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "வெறுமனே நான்கைந்து நல்ல காட்சிகளை எழுதிவிட்டு அதற்காக அவசரகதியில் ஒரு திரைக்கதையை எழுதி முடித்ததைப் போல இருக்கிறது முழு படமும். ஆரம்ப ஸ்டன்ட் காட்சியிலும், இடைவேளை காட்சியிலும் கொடுத்த உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் திரைக்கதையில் போட்டியிருந்தால் இன்னொரு ‘கஜினி’யாகவோ, ‘துப்பாக்கி’யாகவோ கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘மதராஸி’" என்று எழுதினர்.[14]

மேற்கோள்கள்

  1. Krishnan, Achu (17 February 2025). "The action packed first teaser for Sivakarthikeyan's upcoming Madharasi is here". WION (in ஆங்கிலம்). Archived from the original on 17 February 2025. Retrieved 6 April 2025.
  2. S, Goutham (14 April 2025). "Madharasi Release Date: Sivakarthikeyan's movie with director AR Murugadoss set to hit big screens on..." Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 14 April 2025. Retrieved 14 April 2025.
  3. ஜெயா தொலைக்காட்சி [@jayatvofficial] (15 May 2024). "Sanjay Interview | SK 23 EXCLUSIVE UPDATE ! 😍 | Aranmanai 4 | Jaya Tv". Archived from the original on 23 February 2025. Retrieved 23 February 2025 – via இன்ஸ்ட்டாகிராம்.
  4. Movie Tamil [MovieTamil4] (29 June 2024). ""#Sachana", who played the daughter of the #VijaySethupathi in #Maharaja, is now playing the sister of SK in the #Sivakarthikeyan starrer #SK23" (Tweet). Archived from the original on 14 April 2025. Retrieved 29 June 2024.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. vinoth. "சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!". tamil.webdunia.com. Retrieved 2025-05-08.
  6. பாலாஜி, ஜீவகணேஷ் ப,சே (2025-04-14). "Madharasi: 'Between Rage And Redemption'- சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு". ஆனந்த விகடன். Retrieved 2025-05-08.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Junglee Music Tamil (2025-08-24). "Madharaasi - Official Trailer". Retrieved 2025-09-01.
  8. "Madharasi: Sivakarthikeyan, Murugadoss's film locked for September release" (in en). இந்தியா டுடே. 14 April 2025 இம் மூலத்தில் இருந்து 16 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250516085351/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/madharasi-sivakarthikeyan-ar-murugadoss-film-september-release-2708878-2025-04-14. 
  9. Rai, Anisha (17 February 2025). "Sivakarthikeyan, Murugadoss's film titled Madharasi, 1st look out on actor's birthday". இந்தியா டுடே (in ஆங்கிலம்). Archived from the original on 17 February 2025. Retrieved 17 February 2025.
  10. K, Manaswini (18 July 2025). "Massive OTT Deal: Hero on Fire, Director on Trial?". M9 News. Archived from the original on 5 August 2025. Retrieved 14 August 2025.
  11. "மதராஸி - விமர்சனம் {3.25/5} : மதராஸி - துப்பாக்கி பின்னணியிலான கதை... ஆனா, துப்பாக்கி மாதிரி இல்லை! - Madharasi". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-09-05.
  12. தினத்தந்தி (2025-09-05). "வெற்றி பெற்றதா சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி..? - 'மதராஸி' விமர்சனம்". www.dailythanthi.com. Retrieved 2025-09-05.
  13. டீம், விகடன் (2025-09-05). "Madharaasi Review: ஆக்‌ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?". vikatan.com/. Retrieved 2025-09-05.
  14. டெக்ஸ்டர் (2025-09-05). "'மதராஸி' விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?". இந்து தமிழ் திசை. Retrieved 2025-09-05.

வெளியிணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மதராஸி&oldid=458084" இலிருந்து மீள்விக்கப்பட்டது