கஜினி (2008 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கஜினி
சுவரொட்டி
இயக்கம்A. R. Murugadoss
தயாரிப்புGeetha Arts
கதைA. R. Murugadoss
இசைA. R. Rahman
நடிப்புAamir Khan
Asin Thottumkal
Jiah Khan
Pradeep Rawat
Riyaz Khan
ஒளிப்பதிவுRavi K. Chandran
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்Geetha Arts
விநியோகம்Studio 18
Adlabs
வெளியீடு25 திசம்பர் 2008
ஓட்டம்3 hrs 1 min
நாடுஇந்தியா
மொழிHindi
ஆக்கச்செலவுINR 45 crores
மொத்த வருவாய்INR 250 crores
US$ $38,316,564 [1]

கஜினி (Ghajini, இந்தி: घजनी), 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய இந்தி மொழி அதிரடித் திரைப்படமாகும், இதை ஏ. ஆர். முருகதாசு என்பவர் திரைக்கதை எழுதி இயக்க முதல் திரைப்படம். இதில் அமீர் கான், அசின், ஜியா கான், பிரதீப் இராவத் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய இதே கஜினி என்ற பெயரில் தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும். சஞ்சய் சிங்கானியா (அமீர் கான்) ஒரு சக்திவாய்ந்த தொழில்முனைவராவார், இவர் இவரது வருங்கால மனைவி கல்பனா (அசின்) மீது ஏற்பட்ட வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு முன்நிகழ்வுகளின் நினைவிழப்பு நோயால் சஞ்சய் பாதிக்கப்படுகிறார்.

இப்படத்தின் கதைக்களம் இரண்டு படங்களிலிருந்து ஈர்க்கப்பட்டது: மெமெண்டோ (2000) மற்றும் ஏப்பி கோ லவ்லி (1951). அமீர் கானும் முருகதாசும் இணைந்து இப்படத்தினை எழுதி உள்ளனர், அமீர்கான் இந்தி மொழி பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை பரிந்துரைத்திருக்கிறார். முக்கியமாக தமிழில் இரட்டை வேடத்தில் முக்கிய எதிரி நடித்துள்ளார், இந்தியில் அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு முக்கிய எதிரி மட்டும் இருக்கின்றார். அல்லு அரவிந்த், மது மண்டேனா, தாகூர் மது ஆகியோர் இணைந்து தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர், கீதா ஆர்ட்ஸ் விநியோகம் செய்தது, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

25 திசம்பர் 2008 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக மாறியது, உள்நாட்டில் ₹ 100 கோடியைத் தாண்டிய முதல் பாலிவுட் திரைப்படம், 100 கோடி கிளப்பை உருவாக்கியது.[2] கஜினியின் கட்டண முன்னோட்ட வசூல் 2.7 கோடி[3] இத்திரைப்படத்தின் அமீரின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கஜினி - தி கேம் என்ற 3டி நிகழ்பட ஆட்டம் உருவாக்கப்பட்டது.[4]

நடிகர்கள்

  • அமீர் கான் - சஞ்சய் சிங்கானியா/சச்சின் சவுகான், ஒரு பணக்கார தொழிலதிபர்; ஏர் வாய்சு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர்; கஜினியால் ஏற்பட்ட ஒரு சோகமான சம்பவத்திற்குப் பிறகு முன்நிகழ்வுகளின் நினைவிழப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார், கஜினியும், அவரது கூட்டாளிகளையும் கொல்ல மட்டுமே உந்துதல் பெற்றார்.
  • அசின் - கல்பனா செட்டி, தன்னை சஞ்சய் சிங்கானியாவின் காதலி என்று பொய்யாகப் பிரகடனம் செய்து விளம்பரம் பெறும் வடிவழகியாக ஆனார், விரைவில் உண்மையாகவே அவரது காதலியாக ஆனார், பின்னர் கஜினியால் கொல்லப்பட்டார்.
  • ஜியா கான் - சுனிதா காலந்த்ரி, ஒரு மருத்துவ மாணவி சஞ்சய் சிங்கானியாவின் வழக்கும் அவரது ஞாபக மறதி பிரச்சனையையும் ஆய்வு செய்ய முயல்கிறார்.
  • பிரதீப் இராவத் - கஜினி தர்மாத்மா, சஞ்சய்யால் குறிவைக்கப்பட்ட பல சட்டவிரோத குற்ற முயற்சிகளுக்கு மூளையாக செயல்பட்ட ஒரு கும்பல் தலைவர்.
  • ரியாஸ் கான் - அர்ஜுன் யாதவ், சஞ்சய் செய்த கொலைகளை விசாரிக்கும் ஒரு காவல் ஆய்வாளர் (குரல்: இராசேசு கட்டார்)
  • காலித் சித்திக் - பங்கச் செராப், சஞ்சயின் தனி உதவியாளரும், ஏர் வாய்சு மேலாளரும்
  • டின்னு ஆனந்த் - சத்வீர் கோலி, கல்பனாவின் முதலாளி
  • சாய் தம்கங்கர் - அமிர்தா காச்யப், சுனிதாவின் தோழி
  • சுப்ரீத் ரெட்டி - கஜினியின் உதவியாளர்
  • மகேந்திர குலே - கஜினியின் உதவியாளர்
  • விபா சிப்பர் - அவால்தார் வைஜெயந்தி
  • சசுனில் குரோவர் - சம்பத், வடிவழகர், போலி சஞ்சய் சிங்கானியாவாக பயிற்சி பெறுகிறார்
  • இராசேந்திரன் - கஜினியின் உதவியாளர்
  • பிர்தௌசி ஜுசுசவல்லா - டாக்டர் பெசுடன் வாடியா
  • சோனல் சேகல் - விளம்பர வடிவழகி

சிறப்புத் தோற்றம்

  • அஞ்சும் இராசபாலி - டாக்டர் தேப்குமார் மித்ரா, சுனிதாவின் பேராசிரியர்

தயாரிப்பு

இப்படத்திற்கு கஜ்ரி என்று பெயர் சூட்டப்பட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின.[5] இது தமிழில் வெளிவந்த கஜினி (2005) படத்தின் மறுஉருவாக்கமாகும். அமீர் கான், தனது தொழிலில் இதற்கு முன் ஒரு மறுஉருவாக்க படத்தில் பணிபுரியாதவர்,[6] முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கினார், ஆனால் தமிழ் கஜினி சூர்யாவால் சமாதானப்படுத்தப்பட்டார், "கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யக்கூடிய ஒரே ஒருவன் அமீர்கான் தான்." என்று சூர்யா அவரிடம் கூறினார்.[7] சூர்யா கானின் ரசிகராக இருந்தார், மேலும் படத்தின் வளர்ச்சியில் ஓரளவு ஈடுபாடு கொண்டிருந்தார், படத்தின் வளர்ச்சியின் போது கானுடன் இரண்டு ஆண்டுகள் நிமிட விவரங்களைப் பற்றி விவாதித்தார்.

பிரியங்கா சோப்ரா (மேல்) முக்கிய பெண் கதாநாயகியாக நடித்தார், ஆனால் பின்னர் படைப்பாற்றல் வேறுபாடுகள் காரணமாக அசின் (கீழே) மாற்றப்பட்டார்.

பிரியங்கா சோப்ராவுக்கு கல்பனா பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பின்னர் தமிழ்த் திரைப்படத்தில் இருந்து தனது பாத்திரத்தை மீண்டும் நடிக்க அசின் மாற்றப்பட்டார்.[8] தமிழ் கஜினி-இல் இருந்து என்ன இருக்க வேண்டும், என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அமீர் கான் திரைப்படத்தை எழுதும் பணியில் ஈடுபட்டார். திரைப்படத்தின் மாற்றப்பட்ட ஏறணியை கான் மூலம் மீண்டும் எழுதப்பட்டது என்று முருகதாசு தெரிவித்தார்.

திரைப்படத்தின் மற்ற பகுதிகளில் அதிக மாற்றங்களைச் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் கஜினி தமிழ் படத்திலிருந்து என்ன மாற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் போது, அமீர், தமிழை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதியாகக் குறைத்து விடுவார். ஆனால் ஏறணியை மீண்டும் எழுத வேண்டும் என்று முடிவு செய்தார். கிளைமாக்ஸின் முழு இடம், சம்பவங்கள், வசனங்களை அமீர் மீண்டும் எழுதினார். அமீர் செய்த மாற்றங்களால் தமிழ் கஜினியை விட இந்தி பதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.

—ஏ. ஆர். முருகதாசு[9]

படப்பிடிப்பு

மே 2007 இல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.[10] ஏறணி ஐதராபாத்து ஓல்ட் சிட்டியில் படமாக்கப்பட்டது. பெங்களூரு, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன், நமீபியாவில் உள்ள டெட்பான் பாலைவனம், மும்பை ஆகியவற்றில் படமாக்கப்பட்டது. அமீர் கான் தனது பாத்திரத்திற்காக உடற்பயிற்சியகத்தில் ஒரு வருடம் உடற்பயிற்சி செய்தார்.[11] இப்படம் அசினுக்கு பாலிவுட்டில் அறிமுகமாகிறது. இப்படத்தின் தயாரிப்பு செலவு 65 கோடி.

வெளியீடு

கஜினி 25 திசம்பர் 2008 அன்று உலகளவில் 1,500 அச்சிட்டுகளுடன் வெளியிடப்பட்டது,[12] உள்நாட்டு சந்தையில் எண்ணிமம், அனலாக் பதிப்புகள் உட்பட 1,200 வெளியீடுகள்,[13][14] அந்நேரத்தில் மிகப்பெரிய பாலிவுட் திரைத்துறையில் வெளியீடாக அமைந்தது. உள்நாட்டு உரிமைகள் கீதா ஆர்ட்சு நிறுவனத்திற்கு ₹530 மில்லியனுக்கு விற்கப்பட்டது, அதே சமயம் செய்மதி, வெளிநாட்டு, உள்நாட்டு ஊடக உரிமைகள் மொத்தம் ₹400 மில்லியனுக்கு விற்கப்பட்டு, சாருக் கானின் ஓம் சாந்தி ஓம் படத்தின் ₹730 மில்லியன் சாதனைகளை முறியடித்தது.[15]

வெளிநாட்டு விநியோகர் ரிலையன்சு என்டர்டெயின்மென்ட், அமெரிக்காவிலும், கனடாவிலும் 112 வெளியீடுகளும், இங்கிலாந்தில் 65 வெளியீடுகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 36 வெளியீடுகளும் உட்பட 22 நாடுகளில் 300 வெளியீடுகளுடன் படத்தை வெளியிட்டது. நோர்வே, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஆங்காங், சிங்கப்பூர் ஆகிய கஜினி வெளியிடப்பட்டது.[16] இது சுமார் 650 கட்டண முன்னோட்டங்களைக் கொண்டிருந்தது, இது சுமார் ₹70 மில்லியன் பெற்றது.[17]

இறுவட்டு பதிப்புகள் பிக் ஹோம் வீடியோவால் தயாரிக்கப்பட்டது, சர்வதேச விநியோகர் அட்லாப்சு பிலிம்சு லிமிடெட் (புதிய பெயர் ரிலையன்சு மீடியாவொர்க்சு) 13 மார்ச் 2009 அன்று விநியோகிக்கப்பட்டது.[18]

நிகழ்பட விளையாட்டுகள்

திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணினி நிகழ்பட விளையாட்டு எஃப்எக்சுலேப்சு சுடுடியோசு பிரைவேட் லிமிடெட், கீதா ஆர்ட்சு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது, ஈரோசு ஹோம் என்டர்டெயின்மென்ட் மூலம் சந்தைப்படுத்தப்பட்டு கஜினி தி கேம் விநியோகிக்கப்பட்டது. இது ஐந்து நிலைகளைக் கொண்ட மூன்றாம் நபர் அதிரடி விளையாட்டு இதில் தற்காப்புக் கலைகள், ஆயுதங்கள் கலைப் பொருட்களைப் பயன்படுத்திப் பணிகளைச் செய்ய முடியும்.[19] அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், 15+ வயதுடையவர்கள் விளையாட்டில் பங்கேற்குமாறு விநியோகர் பரிந்துரைக்கிறார்.[20]

கைபேசி நிகழ்பட விளையாட்டு இந்தியாகேம்ஸ் என்கிற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது[21][22]

சர்ச்சை

படம் முடிவதற்குள் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கைது செய்யப்பட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கூறுகையில், இந்தப் படத்தை இந்தியில் மறுவாக்கம் செய்யும் உரிமையை அவர் வாங்கவில்லை என்றார்.[23]

முருகதாசு கதையின் அசல் திரைப்படமான மெமெண்டோ (2000) கிறிஸ்டோபர் நோலன் மிகவும் வருத்தமடைந்ததாக அனில் கபூர் தெரிவித்தார், அவர் அனிலிடம் "எனது படம் ஒன்று நகல் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். நான் (கபூர்) கஜினி என்றேன். இதனால் நோலன் மிகவும் வருத்தப்பட்டார். அமீரிடமும் சொன்னேன். நான் (நோலனிடம்) சொன்னேன், படம் இப்போதுதான் அங்கு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. (அவர் பின்னர்) ஆமாம், பணம் இல்லை, கடன் இல்லை, எதுவும் இல்லை."

வரவேற்பு

மதிப்பாய்வு திரட்டி ரோட்டன் டொமேட்டோசில் 50% நல்ல மதிப்புரைகள்.[24]

விமர்சனங்கள்

சிஎன்என்-ஐபிஎன் இன் இராசீவ் மசந்த், "கஜினி ஒரு நல்ல படம் இல்லை, ஆனால் அது நிறையளவு மூலம் பொழுதுபோக்கை வழங்குகிறது" என்று 3 நட்சத்திரங்களை வழங்கினார்.[25] பாலிவுட் டிரேட் நியூசு நெட்வொர்க்கின் மார்ட்டின் டிசோசா, திரைக்கதையில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டு, 3.5 நட்சத்திரங்களைக் வழங்கி செயலைப் பாராட்டினார்.[26] பாலிவுட் அங்காமாவைச் சேர்ந்த தரண் ஆதர்சு "படம் எல்லா வழிகளிலும் வெற்றி பெற்ற படம்" என்று குறிப்பிட்டு, 4.5 நட்சத்திரங்களைக் அளித்தார்.[27] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த நிகத் காசுமி, அமீர் கானின் நடிப்பைப் பாராட்டி 3.5 நட்சத்திரங்களை அளித்தார்.[28]

அமீரின் நடிப்பு இன்றுவரை அவரது சிறந்த நடிப்பு என்று ஜீ நியூசு விவரித்துள்ளது.[29] ரெடிப்.காம் சுகன்யா வர்மா, படத்தை "இருண்ட நினைவுகளின் நேர்த்தியான தொகுப்பு, இது மீண்டும் உயிர்ப்பிக்க திகிலூட்டும், அனுபவத்திற்கு நொறுங்கும்" என்று குறிப்பிட்டு 3.5 நட்சத்திரங்களைக் அளித்தார்.[30] என்டிடிவியின் அனுபமா சோப்ரா, "கஜினி ஒரு சிறந்த படமோ அல்லது மிகச் சிறந்த படமோ கூட இல்லை, ஆனால் நீங்கள் அதைப் பார்க்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். பழைய நாட்களில் நாம் சொல்வது போல், பைசா வசூல்" .[31] இந்தியா டுடே காவேரி பம்சாய், "இது ஒரு கவிஞரால் நடனமாடப்பட்ட மிருகத்தனம், எனவே இது மிகவும் அழுத்தமானது. "என்று 3.5 நட்சத்திரங்களை அளித்தார்.[32]

திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையகம்

கஜினி 25 திசம்பர் 2008 அன்று கிறித்துமசு தினத்தன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இரட்டை இலக்கத்தில் திறக்கப்பட்ட முதல் பாலிவுட் திரைப்படமாக ஆனது, அதன் தொடக்க நாளில் ₹102 மில்லியன் வசூலித்ததை, தொடர்ந்து ₹118 மில்லியன், ₹102.5 மில்லியன், ₹87.5 மில்லியன் என வசூலித்தது, அதன் நான்கு நாள் தொடக்க வார இறுதி வசூலை ₹410 மில்லியன் எடுத்துக்கொண்டது. இப்படம் அதன் நான்காவது வாரத்தில் உள்நாட்டில் ₹1 பில்லியனைக் கடந்தது, இதன் மூலம் உள்நாட்டில் ₹100 கோடியை தாண்டிய முதல் பாலிவுட் படம் என்ற பெருமையைப் பெற்றது. 100 கோடி குழுவில் நுழைந்த முதல் பாலிவுட் படம் இதுவாகும்.

அந்நேரத்தில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக ஆனது,[33] "எல்லா நேரமும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்" என்று அறிவிக்கப்பட்டது.[34][35] அதன் சாதனையை ஒரு வருடம் கழித்து மற்றொரு அமீர் கான் படமான 3 இடியட்சு (2009) முறியடித்தது.

ஒலிச்சுவடு

கஜினி
ஒலிச்சுவடு
வெளியீடுநவம்பர் 24, 2008 (2008-11-24)
ஒலிப்பதிவுபஞ்சதன் ரெக்கார்ட் இன் அண்ட் ஏஎம் சுடுடியோசு
இசைப் பாணிதிரைப்பட ஒலிச்சுவடு
நீளம்34:00
இசைத்தட்டு நிறுவனம்டி-சீரிஸ்
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
Yuvvraaj
(2008)
கஜினி
(2008)
Slumdog Millionaire
(2009)

இப்படத்தில் பாடல்களை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், பிரசூன் ஜோசி வரிகளை எழுதியுள்ளார். இதில் இரண்டு மறுக்கலவைகள் உட்பட ஆறு பாடல்கள் உள்ளன.

ஒலித் தடப் பட்டியல்
# பாடல்கலைஞர்(கள்) நீளம்
1. "ஏ பச்சூ"  சுசான் டி'மெல்லோ 3:48
2. "பகா"  கார்த்திக் 5:13
3. "குசாரிச்"  ஜாவத் அலி, சோனு நிகம் (முணுமுணுத்தல்) 5:29
4. "லட்டூ"  சிரேயா கோசல் 4:30
5. "கைசே முஜே"  பென்னி தயாள், சிரேயா கோசல் 5:46
6. "பெஹ்கா (Remix by Dj A-Myth)"  கார்த்திக் 5:13
7. "குசாரிச் (Remix by Dj A-Myth)"  ஜாவத் அலி, சோனு நிகம் (முணுமுணுத்தல்) 5:29
8. "கைசே முஜே"  Instrumental 4:01
மொத்த நீளம்:
34:00

வரவேற்பு

"கஜினியின் இசை 2009 ஆம் ஆண்டு கிறிசுதுமசு வெளியீட்டிற்குப் பிறகு அலைகளை உருவாக்கத் தயாராக உள்ளது. ஆண்டின் இறுதியில் 'சிறந்ததற்கு சிறந்த' பட்டியல் தொகுக்கப்படும் போது, கஜினியை புறக்கணிப்பது கடினமாக இருக்கும்" என்று பாலிவுட் அங்காமா எழுதியது.[36] "இது அவரது (ஏ. ஆர். ரகுமான்) மிகச்சிறந்த இசைத்தொகுப்புகளில் ஒன்றாக இருக்கலாம். ஒலித் தடங்கள் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொன்றும் சரியான கணிக்க முடியாத தன்மையுடன் அடுத்ததை இணைக்கின்றன." என்று ரகுமானை பாராட்டி அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களை வழங்கி ரெடிப்.காம் விமர்சகர் எழுதினார்.[37] பாக்சு ஆபீசு இந்தியா என்ற இந்திய வர்த்தக வலைத்தளத்தின்படி, ஒலிப்பதிவு ஒலிச்சுவடு சுமார் 1.9 மில்லியன் யூனிட்கள் விற்கப்பட்டது , இது அந்த ஆண்டின் சிறந்த விற்பனையான பாலிவுட் இசை ஒலிச்சுவடாக அமைந்தது.[38]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

குறிப்புதவிகள்

  1. http://www.boxofficemojo.com/movies/?id=ghajini.htm
  2. "Aamir Khan's 10 BIGGEST Hits - Rediff.com". http://www.rediff.com/movies/report/aamir-khans-10-biggest-hits/20141222.htm. 
  3. "'3 Idiots' surpasses Aamir's last release 'Ghajini'". The Hindu (Chennai, India). 29 December 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/article127885.ece. 
  4. "The Ghajini Video Game Arrives!". 22 December 2008 இம் மூலத்தில் இருந்து 1 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090201214144/http://www.india.com/entertainment/movies/the_ghajini_video_game_arrives_2135. 
  5. Faridoon Shahryar (21 November 2006). "Aamir Wants Asin in Ghajini Remake" இம் மூலத்தில் இருந்து 6 December 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061206040838/http://www.indiaglitz.com/channels/hindi/article/27064.html. 
  6. "Exclusive: Suriya on Aamir's Ghajini". Rediff. 29 December 2008. http://www.rediff.com/movies/2008/dec/29suriya-on-aamirs-ghajini.htm. 
  7. "Surya convinced me to do Ghajini: Aamir Khan". December 2008 இம் மூலத்தில் இருந்து 2017-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171210071642/http://www.sify.com/movies/Surya-convinced-me-to-do-Ghajini-Aamir-Khan-imagegallery-1-Movies-jdwmUyfhdeb.html. 
  8. "5 blockbuster movies Priyanka Chopra REJECTED! In 3 of them Deepika Padukone replaced her | Entertainment News". 17 March 2019. https://www.timesnownews.com/entertainment/news/people/article/5-blockbuster-movies-priyanka-chopra-rejected-in-3-of-them-deepika-padukone-replaced-her/383940. 
  9. "Aamir Khan rewrote Ghajini climax". Hindustan Times. 31 December 2008. http://www.hindustantimes.com/india/aamir-khan-rewrote-ghajini-climax/story-gZqQPykgNOR4dPy7kdRg6H.html. 
  10. "Ghajini shooting in Chennai". http://www.filmibeat.com/tamil/exclusive/aamir-asin-ghajini-hindi-150507.html. 
  11. "How Aamir trained for Ghajini". 15 December 2008. http://www.rediff.com/movies/2008/dec/15sl1-aamirs-workout.htm. 
  12. "Ghajini already a hit at ticket counters" இம் மூலத்தில் இருந்து 23 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150223203726/http://www.hindustantimes.com/entertainment/ghajini-already-a-hit-at-ticket-counters/article1-360114.aspx. 
  13. Meena Iyer (8 January 2009). "'Ghajini' first Hindi movie to cross Rs 200cr mark". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214155/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-08/mumbai/28028047_1_ghajini-producer-bollywood-film-hindi-film. 
  14. "Ghajini to fire up screen with 300 paid previews". The Economic Times. 23 December 2008. http://articles.economictimes.indiatimes.com/2008-12-23/news/27707339_1_previews-tickets-at-regular-rates-important-marketing-strategy. 
  15. "Aamir's 'Ghajini' Sold for RS 90 Crore!!". Stardust இம் மூலத்தில் இருந்து 28 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130128023655/http://www.magnamags.com/content/view/967/104/lang,english/. 
  16. "BIG Pictures goes bigger with 'Ghajini' in the overseas market". Reliance Entertainment. 22 December 2008 இம் மூலத்தில் இருந்து 26 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426070516/http://www.rbe.co.in/news-big-pictures-13.html. 
  17. "Ghajini to fire up screen with 300 paid previews". 23 December 2008. http://articles.economictimes.indiatimes.com/2008-12-23/news/27707339_1_previews-tickets-at-regular-rates-important-marketing-strategy. 
  18. "Ghajini's DVD MSRP". Amazon.com. 29 July 2009. https://www.amazon.com/exec/obidos/ASIN/B001TLWRBO/boxofficemojo-20. 
  19. "Ghajini – The Game". 29 July 2009 இம் மூலத்தில் இருந்து 13 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090413145807/http://ghajini.fxlabs.com/index.html. 
  20. "Ghajini – The Game MSRP". Eros Entertainment. 29 July 2009 இம் மூலத்தில் இருந்து 7 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090207083745/http://dvdstore.erosentertainment.com/product/bollywood-movie.asp?Buy_Ghajini_-_The_Game_PC_CD_ROM_DVD_1a. 
  21. "Ghajini Java Game" (in en). https://phoneky.com/games/?id=j4j40879. 
  22. "Ghajini UW" (in en). https://phoneky.com/games/?id=j3j93492. 
  23. Vicky Nanjappa (1 March 2008). "Ghajini director Murugadoss arrested, released". http://www.rediff.com/news/2008/mar/01film.htm. 
  24. Ghajini (in English), retrieved 2021-12-27
  25. Rajeev Masand (25 December 2008). "Masand's Verdict: Ghajini is dumb and celebrates it". CNN-IBN இம் மூலத்தில் இருந்து 26 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081226083757/http://ibnlive.in.com/news/masands-verdict-ghajini-is-dumb-and-celebrates-it/81344-8.html. 
  26. Martin D'Souza (25 December 2008). "Ghajini Movie Review". Bollywood Trade News Network இம் மூலத்தில் இருந்து 31 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100131101111/http://glamsham.com/movies/reviews/25-ghajini-movie-review-120801.asp. 
  27. Taran Adarsh (25 December 2008). "Ghajini Review" இம் மூலத்தில் இருந்து 22 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022050218/http://entertainment.oneindia.in/bollywood/reviews/2008/ghajini-review-231208.html. 
  28. Nikhat Kazmi (24 December 2008). "Ghajini Critic's review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/moviereview/3887926.cms. 
  29. "Review: 'Ghajini' is Aamir's career-best performance!". Zee News. 25 December 2008 இம் மூலத்தில் இருந்து 16 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110816172840/http://zeenews.india.com/entertainment/articles/story19117.htm. 
  30. "Ghajini: A sleek album of dark memories". Rediff. 25 December 2008. http://www.rediff.com/movies/2008/dec/25ghajini-review-two.htm. 
  31. "Review: Ghajini". NDTV இம் மூலத்தில் இருந்து 28 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110928123949/http://movies.ndtv.com/movie_review.aspx?lang=hindi&id=368&moviename=Ghajini. 
  32. "Ghajini: It's brutal but almost lyrically so". http://indiatoday.intoday.in/story/Ghajini:+It's+brutal+but+almost+lyrically+so/1/23548.html. 
  33. "The other Khan: A marketing genius". http://www.businesstoday.in/magazine/cover-story/the-other-khan-a-marketing-genius/story/5202.html. 
  34. "BoxOffice India.com" இம் மூலத்தில் இருந்து 2008-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080115083431/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=215&catName=MjAwOA==. 
  35. "Box Office 2008" இம் மூலத்தில் இருந்து 12 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012165321/http://boxofficeindia.com/showProd.php?itemCat=215&catName=MjAwOA==. 
  36. Tuteja, Joginder (24 November 2008). "Ghajini music review" இம் மூலத்தில் இருந்து 22 February 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080222111238/http://www.bollywoodhungama.com/movies/musicreview/13397/index.html. 
  37. Sen, Raja (25 November 2008). "Rahman goes gloriously wild with Ghajini". http://www.rediff.com/movies/2008/nov/25rahman-goes-gloriously-wild-with-ghajini.htm. 
  38. "Music Hits 2000–2009 (Figures in Units)". Box Office India இம் மூலத்தில் இருந்து 24 June 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100624132928/http://boxofficeindia.com/showProd.php?itemCat=286&catName=MjAwMC0yMDA5. 

புற இணைப்புகள்

வார்ப்புரு:Bollywood

"https://tamilar.wiki/index.php?title=கஜினி_(2008_திரைப்படம்)&oldid=28183" இருந்து மீள்விக்கப்பட்டது