மான் கராத்தே
மான் கராத்தே | |
---|---|
இயக்கம் | திருக்குமரன்[1] |
தயாரிப்பு | பி. மதன் |
திரைக்கதை | திருக்குமரன் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | சிவகார்த்திகேயன் ஹன்சிகா மோட்வானி சூரி வம்சி கிருஷ்ணா சதீஸ் |
ஒளிப்பதிவு | சுகுமார் |
படத்தொகுப்பு | அஸ்வின் |
கலையகம் | எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 4, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மான் கராத்தே 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஸ் எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.
கதைச் சுருக்கம்
தனது நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு சந்தோசமாக சுற்றுலாப்பயணம் போகிறார் சதீஷ். போன இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவர் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட, விளையாட்டாக அவரிடம் வரம் கேட்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வரம் தருவதாக சித்தர் ஒப்புக்கொள்ள, ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் தினத்தந்தி பேப்பர் வேணும் என சதீஷ் சித்தரை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் தனது மந்திர சக்தியால் உண்மையிலேயே பேப்பரை கையில் கொடுத்துவிட்டு மறைந்து போகிறார் சித்தர்.
அப்படி என்னதான் இருக்கிறது அந்த பேப்பரில் என ஆவலாக புரட்டிப் பார்க்க, பாக்ஸிங்கில் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கும் பீட்டர் என்பவர், அதற்குக் காரணம் என சதீஷையும், அவரின் நண்பர்களின் பெயர்களையும் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது அந்தப் பேப்பரில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தச் செய்தியை நம்பாத அவர்கள், அந்தப் பேப்பரில் இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்க, இரண்டு கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயனை நம்பி, அவரை பாக்ஸராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் சதீஷ் அன் கோ. எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனால், அவரை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள்? என்பதுதான் கதை.
நடிகர்கள்
- சிவகார்த்திகேயன் - தாமஸ் பீட்டர் (மான் கராத்தே பீட்டர்)
- ஹன்சிகா மோட்வானி - யாழினி
- வம்சி கிருஷ்ணா - தாமஸ் பீட்டர் (கில்லர் பீட்டர்)
- சதீஸ் - சான்டி
- சூரி - டைகர் டைசன்
- அனிருத் ரவிச்சந்திரன் (சிறப்புத் தோற்றம்)
இசை மற்றும் பாடல்கள்
# | பாடல் | வரிகள் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "மாஞ்சா" | மதன் கார்க்கி | அனிருத் ரவிச்சந்திரன் | 4:44 | |
2. | "டார்லிங் டம்பக்கு" | யுகபாரதி | பென்னி தயாள், சுனிதி சௌஹான் | 4:10 | |
3. | "உன் விழிகளில்" | ஆர். டி. ராஜா | அனிருத் ரவிச்சந்திரன், சுருதி ஹாசன் | 4:04 | |
4. | "ராயபுரம் பீட்டரு" | ஆர். டி. ராஜா | சிவகார்த்திகேயன், பரவை முனியம்மா | 3:37 | |
5. | "ஓப்பன் த டாஸ்மாக்" | கானா பாலா | தேவா, அனிருத் ரவிச்சந்திரன் | 4:06 | |
6. | "டார்லிங் டம்பக்கு" | யுகபாரதி | நிவாஸ், கல்பனா | 4:11 | |
மொத்த நீளம்: |
24:52 |
மேற்கோள்கள்
- ↑ "மான் கராத்தே இயக்குநரின் அடுத்த படம்!". ஆனந்த விகடன். 30 சூன் 2014.