கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "கூத்து என்பது நாடகம். கூத்தர் என்போர் நாடகம் ஆடுவோர். கூத்தர் பற்றிப் பண்டைய தமிழ்நூல்கள் தெரிவிக்கும் கருத்துகள் இவை. ==புறத்திணை|புற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
{{Reflist|2}} |
{{Reflist|2}} |
||
==காண்க== |
==காண்க== |
||
| ⚫ | |||
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;" |
|||
|- |
|||
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு] |
|||
| ⚫ | |||
|- |
|||
| width=25% | அகத்திணைத் தலைவர்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]] |
|||
<hr> |
|||
|- |
|||
| width=25% | அகத்திணை வாயில்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]] |
|||
<hr> |
|||
|} |
|||
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]] |
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]] |
||
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
||
06:55, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
கூத்து என்பது நாடகம். கூத்தர் என்போர் நாடகம் ஆடுவோர். கூத்தர் பற்றிப் பண்டைய தமிழ்நூல்கள் தெரிவிக்கும் கருத்துகள் இவை.
புறவாழ்க்கையில் கூத்தர் பங்கு
கூத்தர் ஆங்காங்கே களம் அமைத்துக்கொண்டு கூத்தாடுவர். [1] கூத்தாடும் அவர்களது அவைக்கு ஒவ்வொருவராக வருவர். கூத்து முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவர். [2] செங்குட்டுவன் கனக விசயரை வென்றபோது அவர்களின் பக்கம் இருந்து போரிட்டவர்கள் பல வகையான வேடமிட்டுக்கொண்டு போர்க்களத்திலிருந்து தப்பித்து ஓடினர். அந்த வேடங்களில் ஒன்று ஆடும் கூத்தர் வேடம். [3] உயிர் உடலில் ஆடும் கூத்தர் போல் விளையாடிவிட்டுப் போய்விடும். [4] புறத்திணை ஆற்றுப்படை நூல்களில் ஆற்றுப்படுத்தப்படும் மாந்தராக வருவர். [5] மலைபடுகடாம் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
அகவாழ்க்கையில் கூத்தர் பங்கு
கற்புநிலை ஒழுக்கத்தில் கூத்தரின் பங்கு இன்னதெனத் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது. [6] தலைவன் வேறொரு நாட்டுக்குச் சென்றிருக்கும்போது அவன் எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுவந்து தலைவிக்குக் கூறுவர். [7]
- கூத்தர் அகத்திணை மாந்தர்களில் ஒரு சாரார். இவர்கள் திருமணத்துக்குப் பின்னர் வாழும் கற்பு ஒழுக்கத்தில் பரத்தையின்மாட்டுப் பிரிந்து வந்த தலைவன் சார்பாகத் தலைவியிடம் இவ்வாறெல்லாம் சொல்லி வாதாடுவர். [8]
- முன்னோர் ஊடல் தணிந்த செய்திகளைக் கூறுவர்.
- ஊடல் தணிந்து தலைவன் தரும் இன்பத்தைத் துய்க்கும்படி எடுத்துரைப்பர்.
- ஊடல் மனைக்கிழத்தியர் செயலன்று என்று பலவகைகளில் விளக்குவர்.
- ஊடல் தணிந்தால் இன்ன நன்மை விளையும் எனக் காட்டுவர்.
- ஊடிக்கொண்டே இருந்தால் இன்ன துன்பம் விளையும் என விளக்குவர்.
- ஊடிக் கெட்டவளை எடுத்துக்காட்டி ஊடல் தணிக என்பர்.
- எதற்காகத் தலைவி ஊடல் தணியவேண்டும் என்று காரணம் காட்டி விளங்கவைப்பர்.
- ஊடல் தணிவதுதான் மாதர்க்கு அணி எனத் தோதாகக் கூறுவர்.
அடிக்குறிப்புகள்
காண்க
| தொகு | அகத்திணை மாந்தர் |
|---|---|
| அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
| அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|